- இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7.90 லட்சத்தில் தொடங்குகிறது
- நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் டியாகோ சிஎன்ஜி ஏஎம்டீ மற்றும் டாடா டிகோர் ஏஎம்டீ ஆகியவற்றை லான்ச் செய்தது. இது தான் நாட்டின் முதல் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் கார்கள் ஆகும். டியாகோ சிஎன்ஜி ஏஎம்டீயின் ஃப்யூல் எஃபிஷியன்சி ஆட்டோமேக்கர் வெளிப்படுத்தியுள்ளது. இந்த கட்டுரையில், அதன் உண்மையான மைலேஜ் பற்றி நாங்கள் உங்களுக்கு இதில் தெரிவிக்கிறோம்.
டியாகோ சிஎன்ஜி ஏஎம்டீயின் மைலேஜ்:
இந்த சிஎன்ஜி ஹேட்ச்பேக்கை சிட்டியில் சுமார் 46.5 கிமீ தூரம் ஓட்டியபோது, டியாகோ சிஎன்ஜி ஏஎம்டீ ஒரு கிலோவுக்கு 21.1 கிமீ மைலேஜைத் தந்தது. மறுபுறம், ஹைவேஸில் சுமார் 44.5 கிமீ தூரம் எடுத்துச் சென்றபோது, அது 22 கிமீ/கிலோ மைலேஜைத் தந்தது. அதாவது, ஒரு கிலோவுக்கு 21.55 கிமீ மைலேஜ் கொடுத்தது.
டாடா டியாகோ சிஎன்ஜி மேனுவல் vs ஆட்டோமேட்டிக் மைலேஜ் (கார்வாலே மூலம் டெஸ்ட் செய்யப்பட்டவை):
நாங்கள் முன்பே சோதித்தப் போது டியாகோவின் மேனுவல் சிஎன்ஜி வேரியன்ட்டையும், சிஎன்ஜி ஏஎம்டி வேரியன்ட்டுடன் ஒப்பிடும்போது அதன் மைலேஜ் எவ்வாறு என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
மைலேஜ் (கார்வாலே டெஸ்டெட்) | டியாகோ சிஎன்ஜி மேனுவல் | டியாகோ சிஎன்ஜி ஏஎம்டீ |
சிட்டி மைலேஜ் | ஒரு கிலோவுக்கு 17 கிமீ | ஒரு கிலோவுக்கு 21.1 கிமீ |
ஹைவே மைலேஜ் | ஒரு கிலோவுக்கு 33 கிமீ | ஒரு கிலோவுக்கு 22 கிமீ |
டியாகோ சிஎன்ஜி ஏஎம்டீ 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின் பெட்ரோல் மோடில் 85bhp மற்றும் 113Nm டோர்க்கையும், சிஎன்ஜி மோடில் 72bhp மற்றும் 95Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இது ஃபைவ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்