- இது 465 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது
- இது இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களில் வழங்கப்படுகிறது
டாடா மோட்டார்ஸ் தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யுவி நெக்ஸான் இவி’யை 2020 ஆம் ஆண்டு நாட்டில் லான்ச் செய்தது. அப்போதிருந்து, இது எலக்ட்ரிக் எஸ்யுவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் காராக உள்ளது. புதிய டெக்னாலஜி மற்றும் புதிய ஃபீச்சர்ஸுடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்னை கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், அதன் உரிமைகோரப்பட்ட டிரைவர் ரேஞ்ச் பற்றி நாங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இந்தக் கட்டுரையில், இந்த எலக்ட்ரிக் எஸ்யுவியின் உண்மையான டிரைவிங் ரேஞ்ச் பற்றி இதில் பார்போம்
அதன் டாப்-ஸ்பெக் எம்பவர்ட் ப்ளஸ் லாங் ரேஞ்ச் மாடலை நாங்கள் சோதித்துள்ளோம். அதை 100 சதவீதம் சார்ஜ் செய்த பிறகு, பேட்டரி தீரும் வரை நகரத்திலும், நெடுஞ்சாலையிலும் நாங்கள் ஓட்டினோம். இந்த சோதனையின் போது, நெக்ஸான் இவி 296 கிமீ தூரம் வரை சென்றது.
மஹிந்திராவுக்கு போட்டியாக இருக்கும் நெக்ஸான் இவி’யின்விலை ரூ. 14.49 லட்சத்தில் தொடங்கி ரூ. 19.29 லட்சம் வரை செல்கிறது (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்).
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்