- எம்பவர்ட் ப்ளஸ் ஆனது LR வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது
- இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் காஸ்மெட்டிக் அப்டேட் செய்யப்பட்டுள்ளன
டாடா மோட்டர்ஸ் சமீபத்தில் நெக்ஸான், நெக்ஸான் இவி, ஹேரியர் மற்றும் சஃபாரி ஆகியவற்றின் டார்க் எடிஷனை லான்ச் செய்தது. நெக்ஸான் இவி’யின் இந்த ஸ்பெஷல் எடிஷன் எம்பவர்ட் ப்ளஸ் LR என்ற ஒற்றை வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது, இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 19.49 லட்சம். இப்போது அறிமுகத்திற்குப் பிறகு, நெக்ஸான் இவி டார்க் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்ஸிடம் வரதொடங்கியது.
ஸ்டாண்டர்ட் இவி’ யிலிருந்து இதை வேறுபடுத்த, இதில் பிளாக்-அவுட் கிரில், ரேடியேட்டர் கிரில், விண்டோ லைன், பில்லர், டோர் ஹேண்டல்ஸ், ரூஃப் ரெயில்ஸ், டாடா லோகோ மற்றும் ஓஆர்விஎம்களில் ஓனிக்ஸ் பிளாக் எக்ஸ்டீரியர் நிறத்தைப் பெறுகிறது. புதிய 16-இன்ச் அலோய் வீல்களும் உள்ளன, அவை முற்றிலும் பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, நெக்ஸான் இவி டார்க் ஆனது இந்த வேரியன்ட்டை தனித்து நிற்க அதன் ஃப்ரண்ட் ஃபெண்டரில் #DARK பேட்ஜைக் கொண்டுள்ளது.
நெக்ஸான் இவி டார்க்கின் கேபின் முழு பிளாக் தீமுடன் ஃப்ரண்ட் சீட்டின் ஹெட்ரெஸ்ட்களில் பொறிக்கப்பட்ட #DARK சித்திரத்தையலைப் பெறுகிறது. அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது டாப்-ஸ்பெக் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது, இதில் பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, ஒன்பது- ஜேபிஎல் ஸ்பீக்கர் கொண்ட ம்யூசிக் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை அடங்கும். எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் வழங்கப்பட்டுள்ளது.
டாடா நெக்ஸான் இவி டார்க் ஆனது 40.5kWh பேட்டரி பேக், சிங்கிள் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 142bhp மற்றும் 215 Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது, இது ஒரு ஃபுல் சார்ஜில் 465 கிமீ மைலேஜைத் தருகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்