- கார்டியன் எஸ்யுவியுடன் பிரேசிலில் 2024 ஆண்டு அறிமுகமாகும்
- இந்தியாவில் புதிய சி-எஸ்யுவிஸுடன் அறிமுகமாக வாய்ப்புள்ளது
புதிய பெட்ரோல் இன்ஜின்
புதிய 1.0-லிட்டர் ஜிடிஐ டர்போ பெட்ரோல் இன்ஜினை, பிரேசிலில் கார்டியன் எஸ்யுவியுடன் அறிமுகப்படுத்தும் என ரெனோ நிறுவனம் வெளியிட்டது. இந்த புதிய ஃப்ளெக்ஸ்-ஃபியூல் இணக்கமான இன்ஜின் 2027 இல் ரெனோவின் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக உலகெங்கிலும் உள்ள பல வளரும் சந்தைகளுக்கு அதன் வழியைக் கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியர்பாக்ஸ் விருப்பங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
இந்த புதிய இன்ஜின் 125bhp மற்றும் 220Nm டோர்க்கை உற்பத்தி செய்யும். இது சிக்ஸ்-ஸ்பீட் டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படும். இது ஏற்கனவே இந்தியாவில் கிடைக்கும் த்ரீ-சிலிண்டர் 1.0 லிட்டர் இன்ஜினின் பரிணாம வளர்ச்சியாகும். இது முறையே 99bhp மற்றும் 152Nm அல்லது 160Nm ஐ சிவிடீ அல்லது ஃபைவ்-ஸ்பீட் மேனுவலுடன் இணைக்கும் போது உற்பத்தி செய்கிறது.
புதிய 1.0 லிட்டர் இன்ஜினில் என்ன எதிர்பார்க்கலாம்?
1.0-லிட்டர் இன்ஜின் சப்-ஃபோர் எஸ்யுவி பிரிவில் புதிய ஆற்றலை பெறுவதாக மாறியுள்ளது, ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நாட்டில் தங்கள் இன்ஜின்ஸை வழங்குகின்றன. BS6 இன் வருகையுடன் டீசல் இன்ஜின்ஸை தயாரிப்பதில் இருந்து ரெனோ விலகியதால், அடுத்த ஆண்டு வரவிருக்கும் அதன் புதிய சி-எஸ்யுவிஸை இயக்குவதற்கு இது ஒரு வருங்கால மாடலாக தெரிகிறது.
மேலும் உள்நாட்டில் இன்ஜினை தயாரிப்பதற்கான வசதிகள் ஏற்கனவே உள்ளன என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, முந்தைய 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் டஸ்டருடன் வழங்கப்படும் 154bhp/254Nm அளவுக்கு வெளியீடு அதிகமாக இல்லாவிட்டாலும், கூட்டணியில் இது போதுமானதாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்