- நிசான் எஸ்யுவி ஐந்து மற்றும் ஏழு சீட்டிங் ஆப்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டது
- இந்த பிராண்ட் ட்ரைபரின் வெர்ஷனிலும் வேலை செய்துவருகிறது
நிசான் இந்தியா தனது மாடல் வரிசையை வரும் ஆண்டில் மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. ஜப்பானிய கார் தயாரிப்பாளரின் மேக்னைட் எஸ்யுவி இந்தியாவில் விற்பனைக்கு உள்ளது, இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்த ஆண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட்-நிசான் கூட்டாண்மையின் கீழ், பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் ரெனால்ட் நிறுவனத்திடம் இருந்து இரண்டு மாடல்களை வாங்க திட்டமிட்டுள்ளது. ரெனால்ட் சமீபத்தில் உலக சந்தையில் நியூ ஜெனரேஷன் டஸ்டர்ரை அறிமுகப்படுத்தியது. இந்த இந்திய மாடல் விரைவில் நாட்டிற்குள் நுழைய உள்ளது. நிலையான ஐந்து சீட்டர் வெர்ஷனைத் தவிர, இந்த மாடல் ஏழு சீட்டர் அமைப்பிலும் வழங்கப்படும். 2013 இல் ரெனால்ட் டஸ்டர்-நிசான் டெர்ரானோ கூட்டணியைப் போலவே, நியூ ஜெனரேஷன் டஸ்டரும் ரீபேட்ஜ் செய்யப்பட்ட நிசான் எஸ்யுவியாக வெளியிடப்படும்.
ரெனால்ட் ட்ரைபர் ரெனால்ட் வரிசையில் மிகவும் பிரபலமான ஒரு மாடலாகும், மேலும் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும். நிசான் ட்ரைபரை புதிய எம்பீவியாக புதிய பேட்ஜிங்குடன் விற்பனை செய்யும்.
இந்த ஆண்டு, நிசான் இந்தியா மேக்னைட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும், வரும் ஆண்டில், ரெனால்ட் மீதமுள்ள ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்களை விரைவில் அறிமுகப்படுத்தும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்