- அடுத்த மாதம் இந்த மாடலை மாருதி அறிமுகப்படுத்தவுள்ளது
- அதைத் தொடர்ந்து 2024 மாருதி டிசையரும் வரவுள்ளது
மாருதி சுஸுகி நிறுவனம் ஃபோர்த் ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டை மே 2024 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விலை அறிவிப்புக்கு முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்களில் 2024 ஸ்விஃப்ட்டுக்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளும் தொடங்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டை ரூ. 11,000 தொகையை செலுத்தி புக் செய்யலாம். தற்போது அதிகாரப்பூர்வ விவரங்கள் குறைவாக இருந்தாலும், LXi, VXi, ZXi மற்றும் ZXi+ உள்ளிட்ட வேரியன்ட்ஸ் மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, இது ப்ளூ, ரெட், ஒயிட், சில்வர், பிளாக் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் கிடைக்கும்.
டிசைனைப் பொறுத்தவரை, 2024 ஸ்விஃப்ட்டில் புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள், புதிய கிரில், எல்-வடிவ எல்இடி டிஆர்எல் உடன் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்ஸ், ரியர் வைப்பர் வாஷர் மற்றும் ஷார்க்-ஃபின் ஆண்டெனா ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலின் சி-பில்லரில் பொருத்தப்பட்டுள்ள ரியர் டோர் ஹேண்டல்ஸ், இத காரின் டோரில் பொருதப்பட்டிருக்கும்.
வரவிருக்கும் ஸ்விஃப்ட் க்ளோபல் மார்க்கெட்டில் 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது. மாருதி இந்த புதிய இன்ஜினை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா அல்லது ஸ்விஃப்ட் தற்போது வழங்கப்படும் 1.2 லிட்டர் K12C மோட்டாருடன் வருமா என்பது சரியாக தெரியவில்லை.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்