- டாப் வேரியண்ட்ஸ் மிகப்பெரிய விலைக் குறைப்பைப் பெறுகின்றன
- ஹெக்டர் எஸ்யுவியின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன
ஹெக்டர் ப்ளஸ் எஸ்யுவியின் விலையை எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் திருத்தியுள்ளது. பேஸ் வேரியண்ட்ஸின் விலைகள் ரூ. 50,000 குறைக்கப்பட்டுள்ள நிலையில், டாப் ட்ரிம்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ. 1.37 லட்சம் வரை விலைக் குறைவைப் பெற்றுள்ளன.
ஹெக்டர் ப்ளஸ் பெட்ரோல் புதிய விலை
ஹெக்டர் ப்ளஸின் பெட்ரோல் வேரியண்ட்ஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன, இது 141bhp மற்றும் 250Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹெக்டர் ப்ளஸ் உடன் டிசிடீ கியர்பாக்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
வேரியண்ட்ஸ் | |
ஸ்மார்ட் | ரூ. 50,000 விலை குறைந்தது |
ஷார்ப் ப்ரோ மற்றும் சேவ்வி ப்ரோ | ரூ. 66,000 முதல் ரூ. 81,000 விலை குறைந்தது |
ஹெக்டர் ப்ளஸ் டீசல் புதிய விலை
ஹெக்டர் ப்ளஸ் டீசல் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினைப் பயன்படுத்துகிறது, இது 168bhp மற்றும் 350Nm பீக் டோர்க்கை வெளிப்படுத்தும். இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தற்போது நிறுத்தப்பட்டது.
வேரியண்ட்ஸ் | |
ஸ்மார்ட் (7 சீட்டர்) | ரூ. 1.04 லட்சம் விலை குறைந்தது |
ஸ்மார்ட் ப்ரோ (6 சீட்டர்) | ரூ. 1.2 லட்சம் விலை குறைந்தது |
ஷார்ப் ப்ரோ (6 மற்றும் 7 சீட்டர்) | ரூ. 1.22 லட்சம் முதல் ரூ. 1.37 லட்சம் விலை குறைந்தது |
எம்ஜி ஹெக்டர் விலை திருத்தம்
இந்த மாத தொடக்கத்தில், ப்ளஸின் ஐந்து சீட்டர்ஸ் கொண்ட ஹெக்டர் எஸ்யுவியின் விலையையும் எம்ஜி திருத்தியது. ஹெக்டரை ஏழு வேரியண்ட்ஸில் பெறலாம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்ஸின் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்