- ஃபைவ் டோர் தார் 2024 இல் தொடங்கப்படும்
- இதில் எலக்ட்ரிக் சன்ரூஃப் கொடுக்கபடலாம்
மஹிந்திரா தனது ஃபைவ் டோர் தாரை அதன் அறிமுகத்திற்கு முன்னதாக டெஸ்ட் செய்து வருகிறது, இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் எஸ்யுவியின் புதிய லுக் மற்றும் அதன் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் புதிய ஸ்பை படங்கள் வெளிவந்துள்ளன.
படங்களில் காணக்கூடியது போல, புதிய ஃபைவ் டோர் தாரில் புதிய கிரில், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்ஸ் போன்ற புதுப்பிப்புகளைப் பெறும். இன்டீரியரில், தற்போதைய தாரில் உள்ளஅதே பெரிய டச்ஸ்கிரீன் யூனிட், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் இரண்டாவது வரிசையில் பெஞ்ச் சீட் ஆகியவற்றுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா தார் எடிஷனில், ஏற்கனவே உள்ள 2.0-லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0-லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜின் கொடுக்கப்படலாம். இது முன்பு இருக்கும் மாடலை போலவே சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் யூனிட்ஸுடன் இணைக்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்
பட ஆதாரம்: ஆட்டோகார் இந்தியா