- இதில் பொலேரோ மற்றும் பொலேரோ நியோ ஆகியவை அடங்கும்.
- டீசல் இன்ஜினுடன் மட்டுமே வழங்கப்படுகிறது
இந்த வாரம் மஹிந்திரா நிறுவனம் செப்டம்பர் 2023க்கான அனைத்து மாடல்ஸின் சேல்ஸ் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இது XUV700 மற்றும் ஸ்கார்பியோ போன்ற வாகனங்களின் எண்ணிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த கட்டுரையில் பொலேரோ மாடலின் விற்பனை குறித்த தகவல்களை கொடுத்துள்ளோம்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மஹிந்திரா மொத்தம் 9,519 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. இதில் பொலேரோ மற்றும் பொலேரோ நியோ எஸ்யுவி அடங்கும். மேலும், கார் தயாரிப்பு நிறுவனம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 8,108 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது, இதன் விளைவாக ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் 16 சதவீதம் வழர்ச்சியை கண்டது.
மஹிந்திரா பொலேரோவில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 75bhp மற்றும் 210Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது. இதில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் பொலேரோ நியோவில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது, இது 100bhp மற்றும் 260Nm டோர்க்கையும் வெளிப்படுத்திகிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இனைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்