- விலையில் 6.40 லட்சம் வரை குறைக்கப்பட்டது
- இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களில் வழங்கப்படுகிறது
ஜெஎல்ஆர் இந்தியா ஜூலை 2023 இல் நாட்டில் ஃபேஸ்லிஃப்ட் வேலர் ஐ ரூ. 94.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லான்ச் செய்தது. இப்போது ஆட்டோமேக்கர் இந்த சொகுசு எஸ்யுவியின் விலையை ரூ. 6.40 லட்சம் குறைத்துள்ளது, இது தற்போது ரூ. 87,90,000 புதிய எக்ஸ்ஷோரூம் விலையில் விறக்கப்படுகிறது.
வேலர் ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வேரியன்ட்ஸில் கிடைக்கிறது மற்றும் இந்த ஃபுல்லி லோடெட் வேரியன்ட் ரேஞ்ச் ரோவர் இவோக் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் இடையே உள்ள மாடல் ஆகும். வேலரின் புதிய மாடலில் புதிய பிக்சல் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், கவர்ச்சிகரமான பம்பர் மற்றும் ஃப்ரண்ட் கிரில், ரேப்பரவுண்ட் டெயில்லேம்ப்ஸ், வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி உடன் கூடிய புதிய 11.4-இன்ச் கர்வ் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஆக்டிவ் ரோடு நோய்ஸ் கேன்சலேஷன் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் ஆகியவை அடங்கும்.
ஃபேஸ்லிஃப்ட் வேலரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்களால் இயக்கப்படுகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 201bhp/430Nm டார்க்கையும் டீசல் இன்ஜினில் 296bhp/ 400Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. டிரான்ஸ்மிஷனில் இது எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழியாகும், இது பிராண்டின் டெரெய்ன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் வழியாக நான்கு வீல்களுக்கும் சக்தியை அனுப்புகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்