ஒரு காலத்தில், எஸ்யுவி சகாப்தத்திற்கு முன்பு, இந்திய ஆட்டோமொபைல் துறையில் செடான்ஸ் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பிரிவில் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் எஸ்யுவி தாக்குதலுக்கு வடிவம் கொடுத்ததால், செடான் பிரிவு செயலற்றுப் போனது. இருப்பினும், புதிய ப்ளேயர்ஸின் அறிமுகத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது ஒரு மறுமலர்ச்சியைக் கண்டுள்ளது, மேலும் இவற்றில் மிகச் சமீபத்தில் நுழைந்த ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மற்றும் முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா ஆகும்.
இந்த இரண்டு கார்ஸும் அந்த அந்த பிராண்ட்ஸின் சிறந்த விற்பனையான செடான் கார்ஸாக உள்ளன. ஆனால் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கும்போது அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்? இதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
டிசைன்:
புதிய வெர்னாவின் வெளிப்புற சிறப்பம்சமாக பாராமெட்ரிக் ஜூவல் ஃப்ரண்ட் கிரில், பொன்னெட்டின் குறுக்கே இயங்கும் நீண்ட எல்இடி பார், 'H-வடிவ' பாராமெட்ரிக் இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் ஹூண்டாய் லோகோவின் கீழ் ஒரு 'வெர்னா' பேட்ஜிங்.
2023 ஹோண்டா சிட்டி அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது வெளிப்புறத்தில் சிறிய மாற்றத்தைப் பெறுகிறது. பம்பரின் முன்பக்கம் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது பழைய மாடலில் இருந்து எல்இடி ஹெட்லேம்ப்ஸை தக்கவைக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில், இது ஹனிகொம்ப் மெஷ் கிரில்லைப் பெறுகிறது. இது 16-இன்ச் டைமண்ட்-கட் அலோய் வீல்ஸ் உடன் வருகிறது.
டைமென்ஷன்ஸ்:
புதிய ஹூண்டாய் வெர்னா 4,535 மிமீ நீளம், 1,765 மிமீ அகலம் மற்றும் 1,475 மிமீ உயரம், வீல்பேஸ் 2,670 மிமீ ஆகும். இது 528 லிட்டரின் பெரிய பூட்ஸ்பேஸ்யை பெறுகிறது, இது இந்த பிரிவில் மிகப்பெரியது.
2023 ஹோண்டா சிட்டி 4,583 மிமீ நீளம், 1,748 மிமீ அகலம் மற்றும் 1,489 மிமீ உயரம், வீல்பேஸ் 2,600 மிமீ ஆகும். இது 506 லிட்டரின் பெரிய பூட்ஸ்பேஸ்யை பெறுகிறது, இது வெர்னாவுடன் ஒப்பிடும்போது ஹோண்டா சிட்டியை 48மிமீ நீளமாகவும், 17மிமீ குறுகலாகவும், 14மிமீ உயரமாகவும் செய்கிறது. மேலும், வீல்பேஸ் மற்றும் பூட் ஸ்பேஸில் முறையே 70மிமீ மற்றும் 22 லிட்டர்ஸாக சமரசம் செய்கிறது.
இன்டீரியர் மற்றும் ஃபிச்சர்ஸ்
2023 வெர்னா இரண்டு இன்டீரியர் நிறம் தீம்ஸில் இருக்கும். ஸ்டாண்டர்ட் வேறியண்ட்ஸில் பிளாக் மற்றும் பெய்ஜ் நிற தீம்மை பெறுகிறது, அதே நேரத்தில் டர்போ வேறியண்ட்ஸ் ரெட் மற்றும் பிளாக் உட்புறத்தையும் கொண்டுள்ளது. இதில் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் ஃபுல்லி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, சுவிட்சேபல் டைப் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோலர், ஆம்பியன்ட் லைட்டிங், கூல்ட் க்ளவ்பாக்ஸ், பேடல் ஷிஃப்டர்ஸ், எலக்ட்ரோனிக் முறையில் சரிசெய்யக்கூடிய வென்டிலேடெட் மற்றும் ஹீட்டெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் வொய்ஸ்- எனேபிள்ட் ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப் உடன்.
இன்டீரியர் பொறுத்தவரை, புதுப்பிக்கப்பட்ட ஹோண்டா சிட்டி 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவிற்கான வயர்லெஸ் கனெக்டிவிடி மற்றும் 7 இன்ச் கலர் எம்ஐடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், வயர்லெஸ் சார்ஜிங், ஏர் ப்யூரிஃபையர், எலக்ட்ரிக் சன்ரூஃப், ரெயின்-சென்சிங் வைப்பர்ஸ் மற்றும் புதிய இன்டீரியர் தீம் ஆகியவற்றைப் பெறுகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இரண்டு கார்ஸும் ஏடாஸ் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகின்றன. ஹூண்டாய் வெர்னா ஹூண்டாயின் 17 ஸ்மார்ட்சென்ஸ் லெவல் 2 ஏடாஸ் அம்சங்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஹோண்டா 2023 சிட்டி சிக்ஸ் ஏடாஸ் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், ஹோண்டா சிட்டியை விட வெர்னா சிறந்து விளங்குகிறது
இன்ஜின்:
புதிய ஹூண்டாய் வெர்னா இரண்டு பெட்ரோல் இன்ஜின்ஸில் வருகிறது - 1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரெடெட் மில் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின். 1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரெடெட் மில் 113bhp பவரையும் மற்றும் 144Nm டோர்க்கையும், அதே நேரத்தில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 158bhp பவரையும் மற்றும் 253Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இதில் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல், சிவிடீ மற்றும் செவன் ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் ஆகிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்ஸில் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய ஹோண்டா சிட்டியில் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின்ஸில் கிடைக்கிறது. பெட்ரோல் இன்ஜின் 119bhp பவர் மற்றும் 145Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிவிடீ யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ஹைப்ரிட் இன்ஜின் 107bhp பவர் மற்றும் 253Nm டோர்க்கை வெளிப்படுத்துகிறது மற்றும் இ-சிவிடீ யூனிட்டுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டு கார்ஸுமே இப்போது புதிய ஆர்டிஇ மற்றும் BS6 ஃபேஸ் 2 எமிஷன் விதிமுறைகளுக்கு இணங்குகின்றன.
விலை:
ஹூண்டாய் நிறுவனம் வெர்னாவை அறிமுக விலையாக ரூ. 10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) EX வேரியண்ட்க்கும், டாப் SX(O) வேரியண்ட்க்கு ரூ. 17.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த மாடலை EX, S, SX மற்றும் SX(o) ஆகிய நான்கு டிரிம்ஸில் வாங்கலாம்.
மறுபுறம், புதிய ஹோண்டா சிட்டி ப்ரீமியம் சலுகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது ரூ. 11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) SV வேரியண்டில் தொடங்கி. டாப்-ஸ்பெக் ZX வேரியண்டிருக்கு ரூ. 20.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளன. இந்த் செடான் SV, V, VX மற்றும் ZX என்ற நான்கு மாடல்ஸில் வழங்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்