- இஓபீ கன்ட்ரோலரில் உள்ள குறைபாடு காரணமாக திரும்ப அழைக்கப்படுகிறது
- இலவச சர்வீஸ் வழங்கபடும்
ஹூண்டாய் வெர்னா செடானின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவிடீ மாடல்களுக்கான இலவச சர்வீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் சேதமடைந்த யூனிட்டின் குறைபாடு பற்றிய நோட்டிஃபிகேஷனைப் பெறத் தொடங்கியுள்ளனர். வாகன உற்பத்தியாளரின் கூற்றுப்படி, எலக்ட்ரானிக் ஆயில் பம்ப் (இஓபீ) கன்ட்ரோலரில் ஏற்படக்கூடிய குறைபாட்டை ஆராய்ந்து அதை சரிசெய்வதற்காக திரும்ப அழைக்கப்படுவதற்கான உண்மையான காரணம் ஆகும்.
நோட்டிஃபிகேஷனைப் பெற வாடிக்கையாளர்கள் தங்களின் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலரைத் தொடர்புகொண்டு தங்கள் காரைச் சரிபார்த்து, குறைபாடுள்ள பகுதியை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். சமீபத்தில், கியா இந்தியா செல்டோஸ் எஸ்யுவியின் 4,300 யூனிட்களை திரும்பப் பெற்றது.
ஹூண்டாய் வெர்னா மார்ச் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது, EX, S, SX மற்றும் SX (O) ஆகிய நான்கு வேரியன்ட்ஸில் ரூ. 11 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இது 1.5 லிட்டர், என்ஏ டர்போ-பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ஐவிடீ/சிவிடீ மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கபடுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்