- சிங்கிள் மற்றும் டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது
- ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்டா வேரியன்ட்ஸின் இடையே இது அமர்ந்துருக்கும்
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் i20 ஹேட்ச்பேக்கின் புதிய ஸ்போர்ட்ஸ் (O) வேரியன்ட்டின் விலைகளை வெளியிட்டுள்ளது . இந்த புதிய வேரியன்ட் ஸ்போர்ட்ஸ் ட்ரிம் அடிப்படையிலானது மற்றும் இதன் விலை ரூ. 8.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). சிங்கிள் மற்றும் டூயல்-டோன் வண்ண விருப்பங்களில் மேனுவல் கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகின்றன. இதன் டூயல் டோன் வேரியன்ட் ரூ. 8.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்படும்.
புதிய ஸ்போர்ட்ஸ் (O) வேரியண்ட் ஸ்டாண்டர்ட் ஸ்போர்ட்ஸ் ட்ரிமை விட ரூ. 35,000 விலை அதிகம். இதில் வயர்லெஸ் சார்ஜர், டோர் ஆர்ம்ரெஸ்டில் லெதரெட் ஃபினிஷ் மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சன்ரூஃப் என மூன்று புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன, இவை முன்பு தனித்தனியாக விற்கப்படும்.
ஹூண்டாய் i20 ஆனது 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஐவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 82bhp மற்றும் 115Nm டோர்க் திறனையும் வழங்கும். புதிய ஸ்போர்ட்ஸ் (O) தவிர, i20 ஆனது ஏறா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா (O) ஆகிய ஐந்து வேரியன்ட்ஸில் ரூ. 7.04 லட்சம் முதல் ரூ. 11.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்