- லிட்டருக்கு சுமார் 19 கி.மீ மிலேஜைத் தந்தது
- 1.5-லிட்டர், நேச்சுரலி அஸ்பிரெடெட் வெர்ஷனில் டெஸ்ட் செய்யப்பட்டது
2023 ஹூண்டாய் வெர்னாவை 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் அல்லது 1.5 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரெடெட் (என்ஏ) பெட்ரோல் இன்ஜினுடன் பெறலாம். டர்போ வெர்னாவில் 158bhp மற்றும் 253Nm டோர்க்கை உருவாக்குகிறது. இங்கே, நாம் 1.5-லிட்டர், நேச்சுரலி அஸ்பிரெடெட் வெர்ஷனைப் பற்றி பகிர்ந்திருக்கிறோம், இது வெர்னா விற்பனையில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது, எனவே அதன் நிஜ உலக மைலேஜை விவரிப்பது முக்கியம்.
ஹூண்டாய் வெர்னா நகரபுறா மைலேஜ்
இதில் 1.5 என்ஏ வெர்ஷனை சிவிடீ கியர்பாக்ஸுடன் டெஸ்ட் செய்துள்ளோம். இப்போது, கூறப்படும் மைலேஜ் லிட்டருக்கு 19 கி.மீ ஆகும், இருப்பினும் சிட்டி மைலேஜைப் பொறுத்தவரை நிஜ உலக எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. எங்கள் முன் வரையறுக்கப்பட்ட பாதையில் கிட்டத்தட்ட 80 கி.மீ க்கு காரை ஓட்டிய பிறகு, வெர்னா 1.5 என்ஏ சிவிடீ ஆனது டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் லிட்டருக்கு 11.10 கி.மீ திறன் கொண்ட லிட்டருக்கு 11.07 கி.மீ மைலேஜை வழங்கியது.
ஹூண்டாய் வெர்னா ஹைவே மைலேஜ்
வெர்னாவை ஹைவேயில் ஓட்டினோம், இறுதியில், 17.02 கி.மீ ஸ்பீட்டைப் பெற்றோம், கூறப்பட்ட மைலேஜை விட கம்மியாக இருந்தது. இந்த கட்டத்தில், எங்களின் பரிசோதிக்கப்பட்ட ஃபியூல் மைலேஜ் புள்ளிவிவரங்கள் நிஜ-உலக நிலைமைகளில் செய்யப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் இந்த எண்கள் நீங்கள் காரில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். இருப்பினும், உங்கள் வெர்னா சிவிடீயிலிருந்து நீங்கள் பெறக்கூடிய மைலேஜ், டிரைவிங் ஸ்டைல், ஃபியூல் முறை, ஃபியூல் தரம் மற்றும் போக்குவரத்து நிலை போன்ற சில காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்