- சிங்கிள் வேரியன்ட்டில் மட்டுமே வழங்கப்படலாம்
- இது ஃபைவ்-டோர் தார் உடன் போட்டியிடும்
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கூர்கா லைஃப்ஸ்டைல் எஸ்யுவியின் ஃபைவ்-டோர் வெர்ஷன்னை தொடர்ந்து டெஸ்ட் செய்து வருகிறது. கார் தயாரிப்பாளர் இறுதியாக இந்த புதிய வெர்ஷன்னை அடுத்த மாதம் வெளியிடப் போகிறார் என்பதை இப்போது அறிந்திருக்கிறோம்.
புதிய ஃபைவ் டோர் கூர்காவில், குரோம் ஃபினிஷில் கூர்கா எழுத்துடன் கூடிய பிளாக் கிரில், ஃப்ரண்ட் மற்றும் ரியரில் பிளாக்-அவுட் பம்பர்கள், ஃபாக் லைட்ஸ் மற்றும் டூயல் ஃபைவ்-ஸ்போக் அலோய் வீல்கள் போன்ற அம்சங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, இது ஒரு ரூஃப் ரேக், ஸ்நோர்கெல், சங்கி ஸ்குயர் வீல் அர்ச்செஸ், ரியர் கதவில் பொருத்தப்பட்ட ஸ்பேர் டயர் மற்றும் ஏணி, இரண்டு ஹூக் மற்றும் வெர்டிகல்லி ஸ்டேக்ட் டெயில்லைட்ஸ் ஆகியவற்றைப் பெறலாம்.
2024 கூர்காவின் இன்டீரியரில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சர்க்குலர் ஏசி வென்ட்கள், த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைப் பெற வாய்ப்புள்ளது.
ஃபோர்ஸ் கூர்காவின் த்ரீ-டோர் வெர்ஷனில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 90bhp மற்றும் 250Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. ஃபைவ்-டோர் வெர்ஷனிலும் அதே இன்ஜின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அறிமுகப்படுத்தப்பட்டதும், கூர்கா புதிய ஃபைவ்-டோர் மஹிந்திரா தார் உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்