- இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்
- இது டாடா கர்வ் உடன் போட்டியிடும்
கடந்த மாதம், சிட்ரோன் அதன் கூபே எஸ்யுவி C3 பசால்ட்டின் கான்செப்ட் அவதாரத்தை வெளியிட்டது, அதன் பிறகு அதன் ப்ரொடக்ஷன்-ரெடி மாடல் இப்போது முதல் முறையாக ஸ்பை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்பை படங்களில், இந்த காரின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் பற்றிய சில சிறந்த அம்சங்களை தெரிவித்துள்ளது.
ப்ரொடக்ஷன்-ரெடி 2024 சிட்ரோன் C3 பசால்ட் கூபே எஸ்யுவி எக்ஸ்டீரியரில் இன்டெக்ரேட்டட் எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய சிக்னேச்சர் ஸ்ப்ளிட் ஹெட்லேம்ப் டிசைன், கிரில் மற்றும் ஏர் டேமிற்கு கீழே ஹோரிசொன்டள் ஸ்லேட்டுகளுடன் கூடிய ஸ்குயர் இன்சர்ட்ஸ், பிளாக்-அவுட் ஓஆர்விஎம்கள், ஃபிளாப்-டைப் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் சி-பில்லரில் ஆரஞ்சு இன்சர்ட்ஸுடன் பிளாஸ்டிக் எக்ஸ்டென்ஷனுடன் வருகின்றன.
ரியரில், C3 பசால்ட் ஆனது ரேப்பரவுண்ட் எல்இடி டெயில்லைட்கள், உயர் பொருத்தப்பட்ட ஸ்டாப் லைட், ரியர் பம்பரில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் ஹோல்டர் மற்றும் ரேக் செய்யப்பட்ட விண்ட்ஷீல்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலானவை மார்ச் 2024 இல் வெளியிடப்பட்ட கான்செப்ட் வெர்ஷனிலிருந்து எடுக்கப்பட்டவை.
வரவிருக்கும் டாடா கர்வ் உடன் போட்டியிடும் இந்த சிட்ரோன் மாடலின் இன்டீரியரில், த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங்-மவுண்டட் கன்ட்ரோல்ஸ், ஹோரிசொன்டள் ஏசி வென்ட்ஸ், மேனுவல் ஹேண்ட்பிரேக், மேனுவல் ஐஆர்விஎம் மற்றும் கிரே சீட் அப்ஹோல்ஸ்டரி போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
C3 பசால்ட் ஆனது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் மட்டுமே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படலாம். இந்த இன்ஜின் 109bhp பவரையும், 205Nm டோர்க்கையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்