- இதன் விலை 41 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- 650 கிமீ மைலேஜ்ஜைத் தரும்
பிஒய்டி இந்தியா இந்த வார தொடக்கத்தில், அதாவது மார்ச் 5, 2024 அன்று, ரூ. 41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் ஃபுல்-எலக்ட்ரிக் செடான் சீல் ஐ அறிமுகப்படுத்தியது, இது பிராண்டின் மூன்றாவது கார் ஆகும். தற்போது இந்த மாடலின் முன்பதிவுகளின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளதாக கார் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அம்சங்களைப் பொறுத்தவரை, இதில் 15.6 இன்ச் ரோட்டேடிங் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,10.25 இன்ச் எல்சிடி டிரைவர் டிஸ்ப்ளே, லெவல்2ஏடாஸ்,வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபோன்கனெக்டிவிட்டி, டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வென்டிலேடெட் மற்றும் எலக்ட்ரிகல்லி சரிசெய்யக்கூடிய சீட்ஸ், 360 டிகிரி கேமரா மற்றும் பனோரமிக் சன்ரூஃப்மற்றும் பல அம்சங்கள் இதில் உள்ளது.
ஆர்க்டிக் ப்ளூ, அட்லாண்டிஸ் க்ரே, அரோரா ஒயிட் மற்றும் காஸ்மோஸ் பிளாக் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் டைனமிக், ப்ரீமியம் மற்றும் பர்ஃபார்மன்ஸ் ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் சீல் கிடைக்கிறது. இது 61.44kWh மற்றும் 82.56kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களைக் கொண்டுள்ளது. முதல் பேட்டரி 201bhp மற்றும் 310Nm டோர்க்கை உருவாக்குகிறது, இரண்டாவது 308bhp மற்றும் 360Nm டோர்க்கை உருவாக்குகிறது, இது முறையே 510 கிமீ மற்றும் 580 கிமீ டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது. மேலும், அதன் ஸ்போர்ட்டி பர்ஃபார்மன்ஸ் வேரியன்ட் 523bhp மற்றும் 670bhp டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் இது 650 கிமீ டிரைவிங் வழங்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்