- ஸ்போர்ட் ப்ரோ வேரியன்ட் 2.0 லிட்டர், 4 சிலின்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது
- ஒயிட், க்ரே, பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது
பிஎம்டபிள்யூ இந்தியா 3 சீரிஸ் கிரான் லிமோசினின் புதிய வேரியன்ட்டை எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லக்சுரி செடான் கார் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் அறிமுக விலை ரூ. 62.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), இந்த கார் 330Li பெட்ரோல் வேரியன்ட்டில் கிடைக்கிறது.
3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் ஒயிட், க்ரே, பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த லக்சுரி காரின் இன்டீரியரில், எம் ஹெட் லைனர் ஆந்த்ராசைட் அப்ஹோல்ஸ்டரியுடன் எம் ஸ்போர்ட் ப்ரோ வெர்ஷன் ஸ்டாண்டர்டாக வருகிறது. இந்த காரின் பிளாக் நிற கிரில் கிரில், ஹெட்லேம்ப்களைச் சுற்றி அடர் வண்ணம் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுப்பதற்காக க்ளோஸி பிளாக் ரியர் டிஃப்பியூசர் ஆகியவை உள்ளன. இன்டீரியரில், இந்த மாடலில் இல்லுமினேட்டட் டோர் சில் பிளேட்ஸ், எம் ஹெட் லைனர் ஆந்த்ராசைட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஃப்ரண்ட் சீட்க்குப் பின்னால் இல்லுமினேட்டட் ஸ்ட்ராப் கூடுதலாக ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற அம்சங்கள் உள்ளன.
இது 2.0-லிட்டர், 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 258bhp மற்றும் 400Nm டோர்க் 1,550 மற்றும் 4,400rpm இடையே உற்பத்தி செய்கிறது. இந்த கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் மிக எளிதாக எட்டிவிடும். மேற்கூறிய காஸ்மெட்டிக் புதுப்பிப்புகளைத் தவிர, எம் ஸ்போர்ட் ப்ரோ வெர்ஷன் வழக்கமான 3 சீரிஸ் கிரான் லிமோசைனைப் போலவே தோற்றமளிக்கிறது, ஆனால் ஸ்டாண்டர்ட் 3 சீரிஸ் போன்ற எக்ஸ்டென்டெட் வீல்பேஸைக் கொண்டுள்ளது. கிரான் லிமோசின் ஜனவரி-2021 இல் தொடங்கப்பட்டது மற்றும் சரியாக ஒரு வருடம் கழித்து அதன் முதல் புதுப்பிப்பைப் பெற்றது. அந்த நேரத்தில், மேம்படுத்தப்பட்ட கேபினுடன் புதிய ஃப்ரண்ட் மாற்றங்களுடன் வந்தது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்