- ஆறு வேரியண்ட்ஸில் கிடைக்கும்
- ரூ. 10.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது
மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமானது. ஒரு வருடத்திற்குள், இந்த மிட்-சைஸ் எஸ்யுவி 1.20 லட்சம் யூனிட்ஸ்க்கு மேல் விற்பனையாகியுள்ளது. இந்த அதிக தேவையுடன், ஹூண்டாய் க்ரெட்டா-போட்டியாளரின் தற்போதைய முன்பதிவு செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி 23,000 ஆர்டர்களாக உள்ளது.
சுஸுகி கிராண்ட் விட்டாரா ஆனது சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஜெட்டா ப்ளஸ், ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா ப்ளஸ் ஆகிய ஆறு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது, இதன் ஆரம்ப விலை ரூ. 10.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இதற்கிடையில், எஸ்யுவி தற்போது முன்பதிவு தேதியிலிருந்து எட்டு வாரங்கள் வரை காத்திருப்பு காலத்தை கட்டளையிடுகிறது.
மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவில் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மைல்ட்-ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜின் விருபங்களில் கிடைக்கின்றன. முந்தையது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கண்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ஸ்ட்ராங்-ஹைப்ரிட் மோட்டார் ஒரு இ-சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த எஸ்யுவி ஆனது டெல்டா மற்றும் ஜெட்டா வேரியண்ட்ஸுடன் சிஎன்ஜி விருப்பத்தையும் பெறுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்