- ஆகஸ்ட் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
- ஏடபிள்யூடி சிஸ்டம் மற்றும் ஏடாஸை பெறுகிறது
XUV700 20 மாதங்களுக்குள் 1 லட்சம் யூனிட் விற்பனை சாதனையை தாண்டியதாக மஹிந்திரா சமீபத்தில் அறிவித்தது, இந்த சாதனையை அடைய பிராண்டின் போர்ட்ஃபோலியோவில் இருந்து அதிக எஸ்யுவி இதுவாகும். ஃபிளாக்ஷிப் எஸ்யுவியின் முதல் 50,000 யூனிட்ஸ் தொடங்கப்பட்ட 12 மாதங்களுக்குள் டெலிவரி செய்யப்பட்டன, மீதமுள்ள 50,000 யூனிட்ஸ் அடுத்த 8 மாதங்களில் விற்பனை செய்யப்பட்டது.
மஹிந்திரா XUV700 வேரியண்ட்ஸ் மற்றும் வண்ணங்கள்
XUV700 ஆனது MX, AX3, AX5, AX7 மற்றும் AX7L ஆகிய ஐந்து வேரியண்ட்ஸில் கிடைக்கும். ஆர்வமுள்ள வாங்குபவர்கள் எவரெஸ்ட் ஒயிட், மிட்நைட் பிளாக், எலக்ட்ரிக் ப்ளூ, ரெட் ரேஜ் மற்றும் டாஸ்லிங் சில்வர் ஆகிய ஐந்து எக்ஸ்டீரியர் வண்ணங்களில்யிருந்து தேர்வு செய்யலாம்.
XUV700 இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
இந்த ஃபிளாக்ஷிப் எஸ்யுவி 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்ஸில் வழங்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸால் இயக்கப்படுகின்றது. மேலும் ஏடபிள்யூடி சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது, இது டீசல் வேடத்தின் உயர் வேரியண்ட்ஸ்க்கு மட்டும் பொருந்தும்.
மஹிந்திரா XUV700 வெயிட்டிங் பீரியட்
ஆகஸ்ட் 2021 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்யுவி சமீபத்தில் 1 லட்சம் யூனிட் உற்பத்தியை எட்டியது. XUV700 க்கு இந்திய மார்க்கெட்டில் தொடர்ந்து வலுவான தேவை இருப்பதால், அது இப்போது வெயிட்டிங் பீரியடை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. தற்போது, இந்த கார் புக்கிங் செய்த நாளிலிருந்து பெங்களூரில் 48 வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியடை கட்டளையிடுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்