- இது SU7 என்று அழைக்கப்படும்
- முதல் எலக்ட்ரிக் செடான் ஆகும்
சியோமி நிறுவனம் அதன் புதிய SU7 காரை அறிமுகப்படுத்தி, வாகன உலகில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இந்த மாடல், சியோமியின் தொழில்நுட்ப திறனையும், வாகன இன்ஜினியரிங்கிலும் மிகச்சிறந்த சாதனைகளை கொண்டு வருகிறது. SU7, அதன் திடமான வடிவமைப்பு மற்றும் பரந்த உடல் அமைப்புடன், பயணிகளுக்கு அதிக வசதிகளையும், பாதுகாப்பையும் வழங்குகிறது.
டிசைன் மற்றும் அம்சங்கள்
வடிவமைப்பைப் பற்றி பேசுகையில் இந்த ஸ்பீட் அல்ட்ரா 7 (SU7) இல் ஹை-பர்ஃபார்மன்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், பெஜெல்லெஸ் ஓஆர்விஎம், எல்லா டோர்களுக்கும் சாஃப்ட்-க்ளோஸ் ஃபங்ஷன் கொண்ட ஃபிளஷ்-ஃபிட்டிங்க் டோர் ஹேண்டல்ஸ், ஆக்டிவ் ரியர் ஸ்பாய்லர், 21-இன்ச் ஆலோய் வீல்ஸ் பிரேம்போ பிரேக்ஸுடன், அதுவே இன்டீரியரில் 16.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,25 ஸ்பீக்கர்ஸ், மல்டிபல் வயர்லெஸ் சார்ஜர்கள், த்ரீ ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், ஹீட்டெட் ஸ்டீயரிங், பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஃபிக்ஸ்ட் கிளாஸ் ரூஃப், லைடார்- ஏடாஸ் சிஸ்டம், 11 கேமராக்கள் கொண்ட 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ரியர் ஏசி வென்ட்ஸ், டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் ஏழு ஏர்பேக்குகள் கொண்ட 16 டிரைவ் அசிஸ்ட் அம்சங்கள் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்குகிறது.
வேரியன்ட்ஸ் மற்றும் பேட்டரி பேக் விவரங்கள்
சியோமி இந்த காரை ஸ்டாண்டர்ட், ப்ரோ மற்றும் மேக்ஸ் ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் இரண்டு வேரியன்ட்ஸில், சிங்கிள் மோட்டார் செட்டப் கிடைக்கிறது, இது 295bhp மற்றும் 400Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. மேக்ஸ் வேரியன்ட்டில் டூயல்-மோட்டார் செட்டப் உள்ளது, இது 670bhp மற்றும் 838Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 101kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது முழு சார்ஜிங்கில் 810 கிமீ வரம்பை வழங்கும் என்று கூறுகிறது. ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் வெறும் 15 நிமிடங்களில் 510 கிமீ வரை சார்ஜ் செய்ய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கார் வெறும் 2.78 வினாடிகளில் 0 -100 கிமீ வேகத்தை எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 265 கிமீ ஆகும்.