- ஐசிஇ வெர்ஷனின் லூக்கில் இது வழங்கபடலாம்
- முழுமையாக எத்தனாலில் இயங்க திட்டமிட்டுள்ளது
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, உலகின் முதல் எத்தனாலில் இயங்கும், ஹைப்ரிட் காரின் ப்ரோட்டோடைப்பை இன்று வெளியிட்டார். இது டொயோட்டா இன்னோவாவை அடிப்படையாகக் கொண்டது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த எம்பீவியின் எத்தனால் எடிஷனை இந்திய மார்க்கெட்க்கு வரவுள்ளது. இது உலகின் முதல் BS6 ஃபேஸ் 2 எலக்ட்ரிஃபைட் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் காரின் ப்ரோட்டோடைப் ஆகும்.
டொயோட்டாவின் இந்த மாடல் ஐசிஇ வெர்ஷன் போலவே ஒரே மாதிரி இருக்கும். இது கூட்டதில் தனியாக தெரிய ஒரு ஸ்பெஷல் பேட்ஜிங் இருக்கும். இது 2.0 லிட்டர் ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் ஸ்ட்ராங்க் ஹைப்ரிட் இன்ஜினில் கிட்டதட்ட 93% எத்தனாலில் இயங்கும்.
எத்தனால் எப்படி உருவாக்க படுகிறது?
எத்தனால் நெல் உமிகள், சோள எச்சங்கள் மற்றும் பிற பயிர் எச்சங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரும்பு பயிர் அதிகபட்ச எத்தனால் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. எத்தனால் தயாரிக்க, அதிகளவில் விவசாய கழிவுகள் மற்றும் கெட்டுப்போன தானியங்களின் பயன்படுத்தப்படுகின்றன.
எத்தனாலில் இயங்கும் வாகனம்
நாட்டில் 20% எத்தனாலுடன் இயங்கும் பல வாகனங்கள் மார்க்கெட்டில் வந்துள்ளன, அவை E20 ஃப்யூல் இயங்கும் கார்ஸின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, E20 ஃப்யூல் அல்லது ஃப்ளெக்ஸ் ஃப்யூல் கொண்ட கார்ஸில் 20% எத்தனால் பெட்ரோலில் சேர்க்கப்படுகிறது. ஆனால் கிட்டத்தட்ட 100% பெட்ரோல் அல்லது டீசல் இல்லாத வழியில் இயங்கும் முதல் வாகனம் ஆகும்.
எத்தனாலால் நமக்கு என்ன பலன்
இது சுற்றுச்சூழலுக்கு சிறந்தவை. ஃப்ளெக்ஸ் ஃப்யூல் ஆட்டோ-இண்டஸ்ட்ரிக்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் பயனளிக்கும்.
எத்தனாலின் விலை
முன்பு ரூ.56 ஆக இருந்த எத்தனாலின் விலை தற்போது ரூ.54 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை இடத்திற்கு இடம் மற்றும் பதப்படுத்து முறையில் மாறுபடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்