- 25% வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்யும் நேரத்திலேயே ரிதம் பேக்கைத் தேர்வு செய்கிறார்கள்
- பஞ்சின் ரிதம் பேக் ஃபிச்சர்ஸால் நிறைந்த பட்ஜெட் கார் ஆகும்
டாடாவின் பட்ஜெட் காம்பேக்ட் எஸ்யுவியை வாங்க நினைக்கிறீர்களா, மேலும் டாடா பஞ்சின் எந்த வேரியண்ட்டை வாங்குவது என்று முடிவு செய்ய முடியவில்லையா? இந்த கட்டுரையில், டாடா பஞ்சின் எந்த வகை வாங்கலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுவோம்.
25% வாடிக்கையாளர்கள் ரிதம் பேக்கை என் விரும்புகிறார்கள்!
டாடா பஞ்ச் 1.2 லிட்டர் த்ரீ சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வாங்கலாம். இது ப்யூர், அட்வென்ச்சர், அகாம்ப்லிஷ்ட் மற்றும் கிரியேட்டிவ் என நான்கு வேரியண்ட்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அதன் கேமோ எடிஷனும் மார்க்கெட்டில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
டாடாவிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, டாடா பஞ்சின் ரிதம் பேக் வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. 25% வாடிக்கையாளர்கள் ரிதம் பேக்குடன் டாடா பன்ச் முன்பதிவு செய்கிறார்கள். ரிதம் பேக் என்றால் என்ன, அது எந்த வேரியண்ட்ஸில் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
ரிதம் பேக் எந்த வேரியண்ட்ஸில் கிடைக்கிறது?
ப்யூர் மற்றும் அட்வென்ச்சர் என இரண்டு வேரியண்ட்ஸில் ரிதம் பேக்கை ரூ. 6.25 லட்சம் ஆரம்ப விலையில் பெறலாம். ப்யூர் ட்ரிமில் 3.5-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், நான்கு ஸ்பீக்கர்ஸ் மற்றும் ஸ்டீயரிங்கில் ஆடியோ கண்ட்ரோல்ஸை பெறும்.
அட்வென்ச்சர் ட்ரிம் ரிதம் பேக்கைச் சேர்க்கும் போது, நீங்கள் 7-இன்ச் ஹர்மன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைப் பெறுவீர்கள். இதனுடன் கூடுதலாக இரண்டு ட்வீட்டர்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவும் கிடைக்கின்றன.
டாடா பஞ்சின் ஸ்டாண்டர்ட் ட்ரிம் மற்றும் ரிதம் பேக்கின் விலை வித்தியாசம்:
வேரியண்ட்ஸ் | ஸ்டாண்டர்ட் | ரிதம் பேக் | வேறுபாடு |
ப்யூர் | ரூ. 6 லட்சம் | ரூ.6.35 லட்சம் | ரூ.35,000 |
அட்வென்ச்சர் எம்டீ | ரூ.6.90 லட்சம் | ரூ.7.25 லட்சம் | ரூ.35,000 |
அட்வென்ச்சர் ஏடீ | ரூ.7.50 லட்சம் | ரூ.7.85 லட்சம் | ரூ.35,000 |
ரூ. 6.34 லட்சத்திற்கு ப்யூர் ரிதம் பேக்கை வாங்கலாம். அதேசமயம், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட அட்வென்ச்சர் ரிதம் பேக்கை ரூ. 7.24 லட்சம் விலையில் வாங்கலாம். அட்வென்ச்சர் ரிதம் பேக் ஏஎம்டீ ரூ. 7.84 லட்சம் விலையில் கிடைக்கிறது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
இரண்டு ட்ரிம்ஸின் டிரான்ஸ்மிஷன் விருப்பங்கிலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் முன்பதிவு செய்யப்படலாம். அதே சமயம் அட்வென்ச்சர், மேனுவல் மற்றும் ஏஎம்டீ உடன் வாங்கலாம்.
ப்யூர் + ரிதம் பேக் | அட்வென்ச்சர் + ரிதம் பேக் |
3.5-இன்ச் ஃப்லோட்டிங்க் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் | 7-இன்ச் ஹார்மோனிக் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் |
4 ஸ்பீக்கர்ஸ் | 2 ட்வீட்டர்ஸ் |
ஸ்டீயரிங் ஆடியோ கண்ட்ரோல்ஸ் | ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ |
ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா |
ரிதம் பேக்கின் விஷ்யம் என்ன?
மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்களைப் பார்க்கும்போது, ரிதம் பேக் குறைந்த விலையில் தேவையான அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது என்பது தெளிவாகிறது. அதாவது, டாடா பஞ்சின் குறைந்த வேரியண்ட் வாங்குவதற்கான பட்ஜெட் உங்களிடம் இருந்தால் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் அல்லது பார்க்கிங் கேமரா போன்ற சில அடிப்படை அம்சங்களை நீங்கள் விரும்பினால், டாடா பிராண்டே அதை மிகக் குறைந்த விலையில் தருகிறது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களை போட வேண்டியதில்லை, மேலும் அவர்கள் பயனுள்ள அம்சங்களையும் பெறுகிறார்கள். 6.5 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான பட்ஜெட்டைக் கொண்ட டாடா பஞ்சின் ரிதம் பேக் வாடிக்கையாளர்களால் விரும்பப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
டாடா பஞ்சின் மிட் மற்றும் டாப் வேரியண்ட் டாஸ்ல், சன்ரூஃப் பேக் மற்றும் ஃபிளக்ஷிப் பேக் ஆகியவற்றுடன் வாங்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்