வரவிருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதற்கான முன்பதிவுகளும் தொடங்கியுள்ளது. புதிய எக்ஸ்டர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நாங்கள் ஏற்கனவே பேசிருக்கோம். இப்போது, டாடா பஞ்சை வாங்குவதற்குப் பதிலாக, இந்த புதிய ஹூண்டாய்க்காக நீங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதை நாம் இதில் பார்ப்போம்.
முதலில், பஞ்ச் ஒரு மாதத்திற்கு சராசரியாக 10,000 யூனிட்ஸை விற்பனை செய்வதற்கு என்ன காரணங்கள் மற்றும் எக்ஸ்டர் அதை சொந்தமாக என்ன வெல்ல தேவை என்பதையும் பார்ப்போம்.
1. 5-ஸ்டார் என்கேப்: க்ளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் பஞ்ச் ஏற்கனவே 5 ஸ்டார் ரேட்டிங்ஸைப் பெற்றுள்ளது, வாங்குபவர்களுக்கு மற்ற யோசனை எதுவும் இல்லாமல் பஞ்சை வாங்க இது ஒரு முக்கிய காரணம் ஆகும். வாங்குபவர்களுக்கு பாதுகாப்பு ஒரு முக்கிய அம்சமாக மாறியுள்ளது, மேலும் 5-ஸ்டார் என்கேப் மதிப்பீடு அவர்களுக்கு வலுவான சான்றாகும், இதற்கு எக்ஸ்டர் தயாராக இருக்க வேண்டும்.
2. ஸ்பேஷியஸ்: டாடாவின் கேபின்ஸ் எப்போதுமே அதிகபட்ச ஸ்பேஸை வழங்குவதற்காக அறியப்படுகின்றன, மேலும் பஞ்ச் வேறுபட்டதல்ல. வெளிப்புறத்தில் அதன் அளவிற்கு, பஞ்ச் வியக்கும் வகையில் அதிக கேபின் இடத்தை வழங்குகிறது, அங்கு மூன்று பேர் பின்னால் வசதியாக அமரலாம். முன் சீட்ஸில் கூட நீங்கள் மிகப் பெரிய காரை ஓட்டுவது போல் உணர்வை ஏற்படுத்துகிது. அதன் பேக்கேஜிங் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதில் எக்ஸ்டருக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கலாம். மேலும், பஞ்ச் ஒரு நல்ல தோற்றமுடைய வடிவமைப்பையும் கொண்டுள்ளது, இது பல வாங்குபவர்கள் நிச்சயமாக பாராட்டுவார்.
3. குவாலிட்டி லெவெல்ஸ்: பல ஆண்டுகளாக, டாடா தனது கேபின்ஸின் தரத்தை மிக வேகமாக மேம்படுத்தி வருகிறது. இது பஞ்சில் தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் இது ஒரு நல்ல வடிவமைப்பை வழங்குவது மட்டுமல்லாமல், நல்ல ஃபிட் மற்றும் ஃபினிஷும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. ப்ளாஸ்டிக்கின் தரம் நன்றாக உள்ளது மற்றும் நீங்கள் நன்கு தயாரிக்கப்பட்ட காரில் அமர்ந்திருப்பது போல் உணர்வீர்கள்.
4. பவர்ட்ரெயின் சோய்ஸஸ்: ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கொண்ட 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பெறுவது மட்டுமல்லாமல், ஏஎம்டீ’க்கான தேர்வும் உள்ளது. இது இன்னும் C3 உடன் நீங்கள் பெறாத ஒன்று ஃபேக்டரி பொருத்தப்பட்ட சிஎன்ஜி மாறுபாடும் உள்ளது, இது விரைவில் விற்பனைக்கு வரும்.
இப்போது பஞ்ச் சிறப்பாகச் செய்யக்கூடிய விஷயங்களையும், எக்ஸ்டர் எதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் பார்க்கலாம்:
- லக்லஸ்டர் இன்ஜின்: பஞ்சில் உள்ள 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின், காகிதத்தில் 86bhp மற்றும் 113Nm வழங்குகிறது, இது ஒரு விஷயம், ஆனால் நிஜ-உலக செயல்திறன் என்று வரும்போது, அது வேறு கதை. வீல்லின் பின்னால், பஞ்ச் ஓட்டுவதற்கு மிகவும் உற்சாகமாக இல்லை, மேலும் வசதிக்காக மிகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது எக்ஸ்டர் நன்கு சமநிலைப்படுத்தக்கூடியது. கிளட்ச் லைட்டானது, ஃபியூல் சிறந்ததல்ல, ஒட்டுமொத்தமாக, நீங்கள் வீல்லின் பின்னால் நேரத்தை செலவிட விரும்பினால் பஞ்ச் நீங்கள் விரும்பும் கார் அல்ல. இது எக்ஸ்டர் அதன் டிரைவிங் டைனமிக்ஸ் மற்றும் சிறந்த பெட்ரோல் இன்ஜின்ஸுடன் சிறப்பாக வழங்கக்கூடிய ஒன்று ஆகும்.
- லோடெட் ரைடு: பஞ்ச் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளதால், சவாரி தரமும் வசதியாக உள்ளது. எனவே மோசமான சாலைகளில் வாகனம் ஓட்டுவதில் நன்றாக இருந்தாலும், முழுமையாக ஏற்றப்படும் போது அது அமைதியின்மை மற்றும் கீழே இறங்கும். சாலை இல்லாத இடத்தில் பஞ்ச் நன்றாக இருக்கிறது, மேலும் அதன் பணத்திற்கு பஞ்சைக் கொடுக்க எக்ஸ்டரும் நன்றாக இருக்க வேண்டும்.
மொழிபெயர்த்தவர்: பவித்ரா மதியழகன்