- சிங்கிள் வேரியண்ட்டில் கிடைக்கும்
- செப்டம்பர் 5 முதல் புக்கிங் தொடங்கும்
வால்வோ இந்தியா தனது மற்றொரு இவி மாடலான C40 ரீசார்ஜை ரூ.61.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் லான்ச் செய்தது. இது இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முன்பதிவு செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் மற்றும் இந்த விலை முதலில் வாங்குபவர்களுக்கு பொருந்தும். இது பிராண்டின் இரண்டாவது எலக்ட்ரிக் கார், இது பற்றிய மற்ற விவரங்கள் எங்கள் வெப்சைட்டில் உள்ளது.
வால்வோ C40 ரீசார்ஜ் ஃபீச்சர்ஸ்
C40 ரீசார்ஜ் ஆனது சிக்னேச்சர் ஹேமர் வடிவ டிஆர்எல்ஸ், 19-இன்ச் அலோய் வீல்ஸ், ஸ்லோபிங்க் ரூஃப்லைன், டெயில்கேட்டில் பிளாக் லிப் ஸ்பாய்லர் மற்றும் வெர்டிகல்லி அடுக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வால்வோ C40 ரீசார்ஜ் ஆனது 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஹீட் மற்றும் வென்டிலேட்டட் ஃப்ரண்ட் சீட்ஸ், வேகன் இன்டீரியர்ஸ் மற்றும் டூயல் ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுகிறது. இது தவிர, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், சிங்கிள் பெடல் டிரைவ் மற்றும் ஏடாஸ் சேஃப்டி ஃபீச்சர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
C40 ரீசார்ஜ் பேட்டரி மற்றும் ரேஞ்ச்
இது 78kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இதில் இருந்து டூயல் மோட்டார்ஸ் 405bhp மற்றும் 660Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இதன் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 530 கி.மீ வரை செல்லும். இதன் பேட்டரியை 150kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 27 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இது 4.7 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை அடையும் திறனை கொண்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்