- விலை ரூ. 14.07 லட்சத்திலிருந்து ஆரம்பம்
- பேஸ் மாடலிலும் நெறைய அம்சங்கள் பரவலாக வழங்கப்படும்
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வர்டஸின் ஜிடீ லைன் மற்றும் ஜிடீ ப்ளஸ் ஸ்போர்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வெர்ஷனின் ஆரம்ப விலை முறையே ரூ. 14.07 லட்சம் மற்றும் 17.84 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
அம்சங்களைப் பொறுத்தவரை, வர்டஸ் ஜிடீ லைனில் ஆறு ஏர்பேக்குகள், இஎஸ்சி உடன் கொண்ட ஏபிஎஸ், இபிடி, டீபிஎம்எஸ், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஃப்ரண்ட் மற்றும் ரியரில் ஃபாக் லைட்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், அலுமினியம் பெடல்கள் மற்றும் கிரே நிற தையல் கொண்ட பிளாக் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை வழங்கப்படுகின்றன.
எக்ஸ்டீரியரில், வர்டஸ் ஜிடீ லைன் எல்இடி டிஆர்எல், ஃப்ரண்ட் கிரில், பூட் லிட் ஸ்பாய்லர், விண்டோ லைன் மற்றும் வர்டஸ் லெட்டரிங் ஆகியவற்றுடன் பிளாக் எல்இடி ஹெட்லேம்ப்களைப் பெறுகிறது. பின்னர் பிளாக்-அவுட் 16-இன்ச் அலோய் வீல்கள், ஜிடீ லைன் பேட்ஜிங், பிளாக்-அவுட் ஓஆர்விஎம்கள் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
மறுபுறம், வர்டஸ் ஜிடீ ப்ளஸ் ஸ்போர்ட் வெர்ஷனில் ஸ்டீயரிங் மற்றும் சீட் கவர்களில் ரெட் அக்ஸ்ன்ட்ஸ், பிளாக்-அவுட் கேபின், அலுமினிய பெடல்கள் ரெட் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் பிளாக் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வர்டஸ் ஜிடீ ப்ளஸ் ஸ்போர்ட் ஆனது 1.5-லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜிடீ லைன் வெர்ஷனில் 1.0 லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படுகின்றன.