- ஃப்யூல் எஃபிஷியன்சி ஏழு சதவீதம் வரை மேம்பட்டுள்ளது
- இது சிங்கள் மற்றும் ஃபுல்லி லோட்டெட் வேரியண்ட் ஆகும்
2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் வெளியீட்டு தேதி மற்றும் வேரியண்ட்:
ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், 2023 டிகுவானை மே 20, 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. புதுப்பிக்கப்பட்ட இந்த ஃபிளாக்ஷிப் எஸ்யுவி, ஃபுல்லி லோட்டெட் வேரியண்டில்வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் மூலம், உற்பத்தியாளரின் மைலேஜ் ஏழு சதவீதம் வரை சென்றதாகவும், இப்போது இது லிட்டருக்கு 13.54 கிமீ ஏஆர்ஏஐ சான்றளிக்கப்பட்ட மைலேஜைப் பெறுவதாகவும் கூறுகிறார்.
2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆன்ரோடு விலை:
நகரங்கள் | ஆன்-ரோடு விலை |
சென்னை | ரூ. 42.18 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 42.14 லட்சம் |
மதுரை | ரூ. 42.14 லட்சம் |
திருச்சி | ரூ. 42.14 லட்சம் |
சேலம் | ரூ. 42.14 லட்சம் |
பாண்டிச்சேரி (யூனியன் பிரதேசம்) | ரூ. 39.35 லட்சம் |
வேலூர் | ரூ. 42.14 லட்சம் |
தூத்துக்குடி | ரூ. 42.14 லட்சம் |
திருப்பூர் | ரூ. 42.14 லட்சம் |
ஈரோடு | ரூ. 42.14 லட்சம் |
2023 ஃபோக்ஸ்வேகன் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்:
புதுப்பிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டிகுவான் இப்போது BS6 ஃபேஸ் 2-கம்ப்ளைன்ட் 2.0-லிட்டர் டர்போ-சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது, இது 190bhp மற்றும் 320Nm டோர்க்கை உருவாக்கும். ஃபோக்ஸ்வேகனின் 4MOTION சிஸ்டம் வழியாக அனைத்து நான்கு வீல்ஸ்க்கும் பவரை அனுப்பும் மற்றும் இதில் செவன்-ஸ்பீட் டிஎஸ்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.