- 1.5 லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினில் கிடைக்கும்
- மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் வழங்கப்படும்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவில் ஜிடீ லைன் மற்றும் ஜிடீ ப்ளஸ் ஸ்போர்ட் எனப்படும் டைகுன் எஸ்யுவியின் 1.5 லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தையது 1.0 லிட்டர் டீஎஸ்ஐ இன்ஜினுடன் வழங்கப்பட்டாது.
எக்ஸ்டீரியரில், புதிய ஜிடீ ப்ளஸ் ஸ்போர்ட் வேரியன்ட்டானது, க்ளோஸ் பிளாக் ஃபினிஷ்ட் ஃப்ரண்ட் கிரில், டார்க் எல்இடி ஹெட்லேம்ப்கள், கார்பன் ஸ்டீல் க்ரே ரூஃப், கசினோ பிளாக் 17 இன்ச் அலோய் வீல்கள், ரெட் பிரேக் காலிப்பர்கள், டார்க் குரோம் டோர் ஹேண்டல்ஸ், பிளாக் ஃபெண்டரில் பேட்ஜ்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. டிஃப்பியூசர், ட்ரெப்சாய்டல் விங் மற்றும் கிரில், ஃப்ரண்ட் ஃபெண்டர் மற்றும் டெயில்கேட் ஆகியவற்றில் ஜிடி பேட்ஜிங்.
புதிய டைகுன் ஜிடீ ப்ளஸ் ஸ்போர்ட்டில் வைல்ட் செர்ரி ரெட், கேண்டி ஒயிட், லாவா ப்ளூ, ரிஃப்ளெக்ஸ் சில்வர், குரூக்மா எல்லோ, ரைசிங் ப்ளூ மெட்டாலிக் மற்றும் கார்பன் ஸ்டீல் க்ரே உள்ளிட்ட ஏழு வண்ணங்களில் வழங்கபடுகின்றன.
இன்டீரியரில், டைகுனின் புதிய வேரியன்ட் டூயல்-டோன் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி, வைல்ட் செர்ரி ரெட் கலர் ஸ்ட்டிச், ரெட் ஆம்பியன்ட் லைட்டிங், பிளாக் ஹெட்லைனர், ஃப்ரண்ட் சீட்டின் பேக்ரெஸ்ட்டில் ஜிடீ லோகோ, ரெட் ஸ்ட்டிச்சிங் ஸ்போர்ட் ஸ்டீயரிங் வீல், அலுமினியம் பெடல்கள் மற்றும் பிளாக் கிராப் ஹேண்டல்ஸ் உள்ளன.
டைகுன் ஜிடீ ப்ளஸ்ஸ் போர்ட் ஆனது 1.5 லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 148bhp மற்றும் 250Nm பீக் டார்க்கை உருவாக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.