- இந்தியாவில் டைகுனின் விலை ரூ. 11.70 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- ஃபோக்ஸ்வேகன் நாட்டில் மூன்று மாடல்களைக் கொண்டுள்ளது
ஜனவரி 1, 2024 முதல் நாட்டில் வர்டஸ் மற்றும் டைகுன் விலையை ஃபோக்ஸ்வேகன் உயர்த்தியுள்ளது. புத்தாண்டில் கார் உற்பத்தியாளர்கள் தங்கள் விலையை இரண்டு சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர்.
ஃபோக்ஸ்வேகன் வர்டஸின் என்ட்ரி லெவல் கம்ஃபர்ட்லைன் 1.0 எம்டீ வேரியன்ட்டின் விலையில் ரூ. 8,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் 1.5GT டிஎஸ்ஜி வேரியன்ட்டின் விலையில் ரூ. 41,500 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாடலின் விலை இப்போது ரூ. 11.56 லட்சம் முதல் ரூ. 19.41 லட்சம் (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
டைகுன் பற்றி பேசுகையில், இந்த கார் க்ரெட்டா, செல்டோஸ், கிராண்ட் விட்டாரா போன்ற கார்ஸுடன் போட்டியிடுகிறது மற்றும் என்ட்ரி லெவல் கம்ஃபர்ட்லைன் 1.0 எம்டீ வேரியன்ட் ரூ. 8,000 ஆகவும், 1.5 GT எம்டீ வேரியன்ட்டில் ரூ. 47,500 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த மாடலின் புதிய விலை இப்போது ரூ. 11.70 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்