- டைகுன் எஸ்யுவியில் அதிக தள்ளுபடி
- இந்த நன்மைகள் கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் போனஸ் வடிவத்தில் வழங்கபடுகிறது
மற்ற உற்பத்தியாளர்கள் போலவே, வோக்ஸ்வேகன் இந்தியாவும் இந்த மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த நன்மைகள் கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கபடுகின்றன. இந்த மாதம் இறுதி வரை செல்லுபடியாகும் அவற்றின் மாடல் வாரியான விலைகளைப் பார்ப்போம்.
பிப்ரவரி 2024 இல் ஃபோக்ஸ்வேகன் வர்டஸில் வழங்கபடும் தள்ளுபடி விவரங்கள் கீழே உள்ளன:
தள்ளுபடி | தொகை |
கேஷ் தள்ளுபடி | ரூ. 10,000 |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் | ரூ. 30,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி | ரூ. 12,000 |
மொத்தம் | ரூ. 52,000 |
இது ஆறு வேரியன்ட்ஸில் ரூ. 11.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்கப்படுகிறது. ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி, மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவற்றுடன் வர்டஸ் போட்டியிடுகிறது.
மறுபுறம், நிறுவனம் டைகுன் மீது அதிகபட்சமாக ரூ. 1.30 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
தள்ளுபடி | தொகை |
கேஷ் தள்ளுபடி | ரூ. 60,000 |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் | ரூ. 40,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி | ரூ. 30,000 |
மொத்தம் | ரூ. 1,30,000 |
ஸ்கோடா குஷாக்குடன் போட்டியிடும் டைகுன், 1.0 லிட்டர், த்ரீ சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது, இது 115bhp பவரையும் 175Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இரண்டாவது 1.5 லிட்டர், ஃபோர் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினில் 148bhp பவர் மற்றும் 250Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 11.70 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்