- 2025 இன் இறுதியில் இந்தியாவில் லான்ச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- சிங்கிள் சார்ஜில் 201 கிமீ வரை செல்லும்
வியட்நாமிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான வின்ஃபாஸ்ட் தனது சூப்பர்மினி எலக்ட்ரிக் எஸ்யுவி VF3 ஐ லாஸ் வேகாஸில் 2024 கன்ஸ்யுமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோயில் வெளியிட்டது. கார் தயாரிப்பு நிறுவனம் இந்த மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
VF3 ஒரு நீண்ட, பாக்ஸி மற்றும் சக்திவாய்ந்த வடிவமைப்பு, நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. முன்புறத்தில், இது எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஸ்குயர் ஓஆர்விஎம்களால் சூழப்பட்ட செவ்வக மூடிய கிரில்லைக் கொண்டுள்ளது. இது ஒரு தடிமனான பிளாக் பம்பரையும் கொண்டுள்ளது, இது வீல் அர்செஸுடன் இணைக்கப்பட்டு பின்புற பம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. பின்புறத்தில், எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் குரோம் ஃபினிஷில் பிராண்டின் லோகோ உள்ளது, இது இரண்டு முனைகளையும் இணைக்கிறது.
VF3 ஆனது இகோ மற்றும் ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியன்ட்ஸில் ஒற்றை-மோட்டார் விருபத்தில் கிடைக்கும். இருப்பினும், ஆட்டோமேக்கர் அதன் பேட்டரி பற்றி எதையும் வெளியிடவில்லை, அதே நேரத்தில் ஒரு முழு சார்ஜில் சுமார் 201 கிமீ (150 மைல்கள்) ரேஞ்சை தருவதாக நிறுவனம் கூறுகிறது. அதன் நீளம் மற்றும் அகலத்தைப் பற்றி பேசுகையில், VF3 நீளம் 3,190 மிமீ, அகலம் 1,679 மிமீ மற்றும் உயரம் 1,620 மிமீ மற்றும் பூட் ஸ்பேஸ் 550 லிட்டர்.
இந்த மினி எலக்ட்ரிக் எஸ்யுவியில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் டெக்னாலஜி மற்றும் முழுமையாக மடக்கும் இரண்டாவது வரிசை சீட்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டூயல் ஏர்பேக்குகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகளில், இந்த பிராண்ட் தமிழ்நாட்டின் தூதுக்குடியில் தனது தொழிற்சாலையை கட்டத் தொடங்கியுள்ளது. இது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பரவி, ஆண்டுக்கு 1,50,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் மற்றும் 3,500 க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை இந்த நிறுவனம் உருவாக்கும். இந்தத் திட்டத்துக்காக மொத்தம் ரூ. 4,165 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்