- 6.12 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- பெரிய இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ரியர் ஏசி வென்ட்ஸுடன் பல அம்சங்களைக் கொண்டுள்ளது
டாடா மோட்டார்ஸ் அதன் மிகவும் பிரபலமான மாடலான பஞ்ச் எஸ்யுவியின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன்னை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அப்டேட் மேலும் புதிய அம்சங்களைச் சேர்க்கிறது மேலும் இதன் விலை ரூ. 6.12 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. அதன் சமீபத்திய அறிமுகத்திற்குப் பிறகு, இந்த மாடல் இப்போது நாடு முழுவதும் உள்ள ஷோரூம்களை அடையத் தொடங்கியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட டாடா பஞ்ச் 10 வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது, இதில் ப்யூர், ப்யூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர் ரிதம், அட்வென்ச்சர் S, அட்வென்ச்சர்+ S, அசீவ்டு+, அசீவ்டு+ S, கிரியேட்டிவ்+ மற்றும் கிரியேட்டிவ்+ S ஆகியவை அடங்கும். பஞ்ச் எஸ்யுவியின் வண்ண விருப்பங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்சங்களைப் பற்றி பேசுகையில், மேம்படுத்தப்பட்ட பஞ்ச் இப்போது ஒரு பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது, இதில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வென்ட்ஸ் மற்றும் ஃப்ரண்ட் பயணிகளுக்கான சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை அடங்கும். இந்த அம்சங்கள் அனைத்தும் சிஎன்ஜி பதிப்புகளிலும் கிடைக்கின்றன.
பஞ்ச் 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது இரண்டு வெர்ஷனில் கிடைக்கிறது: ஸ்டாண்டர்ட் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் + சிஎன்ஜி. ஸ்டாண்டர்ட் பெட்ரோல் வெர்ஷன் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸைப் பெற்றாலும், பெட்ரோல் + சிஎன்ஜி வெர்ஷனில் ஏஎம்டீ யூனிட்டுடன் மட்டுமே கிடைக்கிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்