- ZS இவி புதிய ஏடாஸ் வேரியண்ட்டைப் பெறுகிறது
- இது 461 கி.மீ மேம்படுத்தப்பட்ட டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது
எம்ஜி மோட்டார் இந்தியா ஆனது அப்டேடட் ZS இவியை இந்தியாவில் விலை ரூ.27.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகபடுத்தியது. இந்த மேம்படுத்தலின் முக்கிய சிறப்பம்சமாக, லெவல் 2 ஏடாஸ் ஆனது ஆல்-எலக்ட்ரிக் மாடலுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இது முதலாக 2020 இல் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் மார்ச் 2022 இல் ஒரு ஃபேஸ்லிஃப்டைப் பெற்றது.
எம்ஜி ZS இவியின் சேஃப்டி ஃபீச்சர்ஸ்
புதிய ஏடாஸ்-பொருத்தப்பட்ட வேரியண்ட் டாப்-ஸ்பெக் எக்ஸ்க்லூசிவ் ட்ரிம் அடிப்படையிலானது மற்றும் எக்ஸ்க்லூசிவ் ப்ரோ என்று அழைக்கப்படும். கூடுதல் அம்சங்களைப் பொறுத்தவரை, லெவல் 2 ஏடாஸ் தொகுப்பு ட்ராஃபிக் ஜாம் அசிஸ்ட், ஃபார்வர்ட் கோலிஷன் வார்னிங், ஸ்பீட் அசிஸ்ட் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் ஃபங்ஷன், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ப்ளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உள்ளிட்ட 17 க்கும் மேற்பட்ட அம்சங்களை வழங்குகிறது. இதில் 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ஹில் டிஸ்செண்ட் கண்ட்ரோல்,எலக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், டீபீஎம்எஸ் மற்றும் ஆறு ஏர்பேக்ஸ் போன்ற மற்ற பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்படுகின்றது.
ZS இவி பேட்டரி கபாஸிட்டி மற்றும் விவரக்குறிப்புகள்
ZS இவி ஆனது 50.3kWh பேட்டரி பேக் மற்றும் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 8.5 வினாடிகளில் ஒரு மணி நேரத்திற்கு 0-100 கி.மீ ஆக்ஸிலரேஷனுடன் 174bhp மற்றும் 280Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. அதன் டிரைவிங் ரேஞ்சைப் பொறுத்தவரை, முழு சார்ஜில் 461 கி.மீ நீட்டிக்கப்பட்ட ரேஞ்சைக் தரும் என்று பிராண்ட் கோருகிறது.
அப்டேடட் ZS இவியின் எக்ஸ்டீரியர் மற்றும் வண்ண விருப்பங்கள்
எக்ஸ்டீரியரில், ZS இவி ஆனது ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில் லேம்ப்ஸ் செட்-அப், 17-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது அரோரா சில்வர், க்லேஸ் ரெட், ஸ்டார்ரி பிளாக் மற்றும் கேண்டி ஒயிட் ஆகிய நான்கு வெவ்வேறு வண்ண விருப்பங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்