- அக்டோபர் 2023 இல் லான்ச் செய்யப்படும்
- ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் பெறுவது உறுதி
டாடா மோட்டார்ஸ் வரும் மாதங்களில் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டை உலகிற்கு வெளிப்படுத்த தயாராக உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, நான்கு மீட்டர் எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் சமீபத்தில் முற்றிலும் வெளிபடையாக காணப்பட்டது.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் எக்ஸ்டீரியர் சிறப்பம்சங்கள்
படத்தில் காணப்படுவது போல், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சமீபத்தில் நெக்ஸான் ரேஞ்சில் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் ப்ளூ எக்ஸ்டீரியர் பெயிண்ட்டில் உள்ளது. முன்புறத்தில், இது ஒரு ஸ்பிளிட் ஹெட்லேம்ப் செட்அப், செங்குத்தாக பொருத்தப்பட்ட ஹெட்லைட்ஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஃப்ரண்ட் பம்ப்பர்ஸ் மற்றும் ஒரு ஸ்லீக்கர் அப்பர் கிரில் ஆகியவற்றைப் பெறுகிறது.
சைட் ப்ரொஃபைலில் தற்போதைய மறு செய்கையைப் போலவே அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெரிகிறது. இருப்பினும், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் புதிய அலோய் வீல்ஸ் வடிவமைப்பைக் கொண்டிருக்கும். மற்ற காணக்கூடிய சிறப்பம்சங்களில் ரூஃப் ரெயில்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, ஓஆர்விஎம் இல் டர்ன் இண்டிகேட்டர்ஸ் மற்றும் ஒரு சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.
மற்றொரு ஸ்பை ஷாட்ஸில் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் ரியர் ப்ரொஃபைலை வெளிப்படுத்துகிறது. புதிய டெயில்லைட்ஸ், Y வடிவத்துடன் டெயில்கேட்டின் அகலம் முழுவதும் இயங்கும் எல்இடி லைட் பார் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பின்னர், திருத்தப்பட்ட ரிஃப்ளெக்டர்ஸ் ரியர் பம்பர் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரூஃப் ஸ்பாய்லர் மூலம் வித்தியாசமாக நிலைநிறுத்தப்படுகின்றன.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இன்டீரியர் மற்றும் அம்சங்களின் பட்டியல்
முந்தைய ஸ்பை ஷாட்ஸில், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் இன்டீரியர்ஸ் பல விவரங்களை வெளிப்படுத்தும் வகையில் லீக் ஆனது. இதில் இல்லுமினேட்டட் டாடா லோகோ, பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பேடில் ஷிஃப்டர்ஸ், டச்-அடிப்படையிலான எச்விஏசி கண்ட்ரோல்ஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் புதிய கியர் லெவர் ஆகியவற்றுடன் டூ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷனல் ஸ்டீயரிங் வீல் உடன் பெறுகிறது.
வரவிருக்கும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் இன்ஜின் விருப்பங்கள்
இன்ஜினைப் பொறுத்தவரை, ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினுடன் பெறலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்