- வரும் மாதங்களில் அறிமுகமாகும்
- முதல் டர்போ-பெட்ரோல் சிஎன்ஜி காராக இருக்கும்
டாடா மோட்டார்ஸ் ட்வின் சிஎன்ஜி சிலிண்டர் டெக்னாலஜியை அறிமுகப்படுத்திய பின்னர் முதல் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் கார்களான டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி ஐ அறிமுகப்படுத்தியது. இப்போது, நெக்ஸான் சிஎன்ஜி இந்தியாவின் முதல் டர்போ-பெட்ரோல் சிஎன்ஜி காரை அறிமுகப்படுத்தி, இந்திய வாகன உற்பத்தியாளர் மீண்டும் வரலாறு படைக்க உள்ளது.
டாடா நெக்ஸான் சிஎன்ஜி ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸ் என இரண்டு கியர்பாக்ஸ் விருப்பங்களைப் பெறும். சிஎன்ஜி-பவர்ட் காம்பேக்ட் எஸ்யுவி 118bhp மற்றும் 170Nm டோர்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் அறிமுகமாகும். இருப்பினும், இந்த ஸ்டாண்டர்ட் பெட்ரோல் மோடில் சிஎன்ஜி வெர்ஷனை விட சற்று குறைக்கப்பட்ட ஆற்றல் புள்ளிவிவரங்களைக் கொண்டிருக்கும்.
இதன் மூலம், நெக்ஸான் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் இவி உள்ளிட்ட பல இன்ஜின் விருப்பங்களை வழங்கும். தற்போது, டாடா மோட்டாரின் சிஎன்ஜி வரிசையானது டியாகோ, டிகோர், அல்ட்ரோஸ் மற்றும் பஞ்ச் ஆகிய நான்கு மாடல்களைக் கொண்டுள்ளது.
அறிமுகம் செய்யப்பட்டவுடன், டாடா நெக்ஸான் சிஎன்ஜி ஸ்டாண்டர்ட் வெர்ஷனை விட 80,000 அதிக விலையில் விற்கப்படும். மேலும் இது காம்பேக்ட் எஸ்யுவி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்