- இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- இவை அனைத்தும் இங்க்ளோ ப்ளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்டவை
மஹிந்திரா தனது வரவிருக்கும் எலக்ட்ரிக் எஸ்யுவிகளை இந்தியாவில் தொடர்ந்து டெஸ்ட் செய்து வருகிறது, சமீபத்தில் அதன் மூன்று டெஸ்ட் மாடல்கள் ஸ்பை செய்யப்பட்டன. இதில் BE.05, XUV.e8 மற்றும் XUV.e9 ஆகியவை அடங்கும், இவை ராஜஸ்தானில் உள்ள ஒரு மாலின் பார்க்கிங்கில் சார்ஜ் செய்வதாகக் காணப்பட்டது.
எக்ஸ்டீரியர்
XUV.e8 ஆனது XUV700 இன் எலக்ட்ரிக் வெர்ஷனாக காணப்படுகிறது மற்றும் XUV.e9 XUV.e8 இன் கூபே வெர்ஷனாக கூறப்படுகிறது. மறுபுறம், BE.05 என்பது மற்றொரு இவி ஆகும், இது முன்னால் வழங்கப்பட்ட கான்செப்ட் மாடல் அடிப்படையாகக் கொண்டது. இதன் சிறப்பு என்னவென்றால், XUV.e9 மற்றும் XUV.e8 ஆகிய கார்களை விட நீளமாக காட்சியளிக்கிறது, இந்த இரண்டு கார்களும் சார்ஜ் செய்வதற்காக அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதை படங்களில் காணலாம். இருவரும் பெரிய டிஆர்எல்களுடன் ஒரே மாதிரியான ஃப்ரண்ட் லூக்கை கொண்டுள்ளனர். மற்ற வாகனங்களைப் போலல்லாமல், XUV.e9 பின்புறத்தில் சார்ஜிங் போர்ட்டைப் பெறுகிறது. இந்த கார்கள் அனைத்தும் ப்ரீமியம் எலக்ட்ரிக் எஸ்யுவி செக்மென்ட்டில் வெளியிடப்படும்.
இன்டீரியர்
எங்களிடம் இன்னும் அதன் இன்டீரியரின் படங்கள் இல்லை என்றாலும், முந்தைய ஸ்பை ஷாட்ஸில் மூன்று 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் டூ-ஸ்போக் ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீலுடன் புதிய டாஷ்போர்டைக் காட்டுகின்றன. லெவல் 2 ஏடாஸ் உடன் வேஹிகள்-டூ-லோட் மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை இந்த இவி கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இன்ஜின் விவரங்கள்
இந்த இவிகள் மஹிந்திராவின் 'பார்ன் எலக்ட்ரிக்' மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யுவிகளின் ஒரு பகுதியாகும். இவை சிங்கிள்-மோட்டார் மற்றும் டூயல்-மோட்டார் விருபங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 60-80kWh வரையிலான பல பேட்டரி விருப்பங்களுடன் வழங்கப்படும். இந்த கார்கள் அதிக வேகத்தில் இயங்குவது மட்டுமின்றி வேகமாக சார்ஜ் செய்யும் திறனுடன் விரைவாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
புகைப்பட ஆதாரம்: ரஷ்லேன்
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்