- 2024 இல் 2 புதிய இவிகள் வரவிருக்கிறான
- ஃபைவ்-டோர் கொண்ட தார் ஆகஸ்ட் 2024 இல் லான்ச் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சுதந்திர தினம் அல்லது குடியரசு தினத்தில் மஹிந்திரா தனது எஸ்யுவிகளையோ அல்லது எந்த வகையான வாகனத்தையோ வழங்குவதில் எப்போதும் செய்திகளில் இருக்கும். 2024 ஆம் ஆண்டில் கூட, இந்த இந்திய கார் உற்பத்தியாளர் தனது ஐந்து புதிய எஸ்யுவிகளுடன் இந்திய சந்தையில் தனது வலிமையை நிரூபிக்க தயாராக உள்ளது.
5-டோர் தார்
2024 ஆம் ஆண்டில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கார் மஹிந்திராவின் ஃபைவ்-டோர் கொண்ட தார் ஆகும். இது தற்போதைய வெர்ஷன்னை விட நீளமாக இருக்கும் மற்றும் சன்ரூஃப் மற்றும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறும். மேலும், இதன் ஃப்ரண்ட் கிரில் மற்றும் அலோய் வீல்ஸின் வடிவமைப்பு மாற்றப்படும். 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தார் லான்ச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
XUV300 ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்திரா தனது புதிய ஆண்டை XUV300 ஃபேஸ்லிஃப்ட்டுடன் தொடங்கலாம். தற்போது இந்த மிட்-சைஸ் எஸ்யுவியை டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது மற்றும் புதிய கனெக்டெட் எல்இடி டெயில் லேம்புடன் மற்றும் பெரிய ஹெட்லேம்ப்ஸை கொண்டிருக்கும். XUV300 இல் ரிடிசைன் செய்யப்பட்ட 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும். மஹிந்திரா XUV300 குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஃபைவ் ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
XUV400 ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்திராவின் XUV300 ஃபேஸ்லிஃப்ட்டிற்குப் பிறகுதான், நிறுவனம் அதன் இவி வெர்ஷன் XUV400 ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்னை சந்தையில் அறிமுகப்படுத்த முடியும். இந்த எலக்ட்ரிக் எஸ்யுவியின் ஸ்டைலில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, நீங்கள் புதிய வீல்ஸ் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுவீர்கள். இருப்பினும், அதன் பேட்டரி பேக்கில் எந்த மாற்றமும் செய்யப்படாது. இது 34.5 பேட்டரி பேக்குடன் 375 கி.மீ ரேஞ்சையும், 39.4 பேட்டரி பேக்குடன் 476 கி.மீ ரேஞ்சையும் தரும்.
XUV700 இவி மற்றும் கேப்டன் சீட் வெர்ஷன்
மஹிந்திராவின் இரண்டாவது இவி XUV.e8 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம். இது XUV700 இன் ஐசிஇ வெர்ஷன்னை அடிப்படையாகக் கொண்டது. ஸ்பை படங்களின்படி, கனெக்டெட் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் டெயில் லேம்ப்ஸ், ஒரு புதிய டிரைவ் செலக்டர், டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவற்றைப் பெறும்.
நியோ ப்ளஸ்
இருப்பினும், பொலேரோ நியோ நீண்ட காலமாக மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இப்போது கார் தயாரிப்பாளர் அதன் பெரிய வெர்ஷன்னைக் கொண்டு வர பரிசீலித்து வருகிறது. கார் உற்பத்தியாளர்கள் இதைப் பற்றி எதுவும் சொல்லத் தயாராக இல்லை என்றாலும், இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மார்க்கெட்க்கு வரும் என்று நம்புகிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்