- ரூ. 20,160 மதிப்புள்ள ஆக்சஸரீஸ் கிடைக்கும்
- அக்டோபர் 2024 இறுதிக்குள் கிடைக்கும்
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அர்பன் க்ரூஸர் டைசரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 20,160 மதிப்புள்ள டொயோட்டா ஜென்யுன் ஆக்சஸரீஸ் (TGA) உடன் பிரத்தியேகமாக வருகிறது, இந்த கார் அக்டோபர் 31 ஆம் தேதி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எடிஷன் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்ஸில் மட்டுமே கிடைக்கிறது மற்றும் இதில் ஸ்பாய்லர், டோர் சில் கார்ட்ஸ், கிரில் மற்றும் ஹெட்லைட்டுகளுக்கான குரோம் இன்சர்ட்ஸ், பாடி சைட் மோல்டிங், டோர் வைசர், 3D மேட்ஸ் மற்றும் வெல்கம் டோர் லேம்ப்ஸ் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. இந்த பேக்கேஜ் முற்றிலும் இலவசம் என்பதால், இந்த புதிய வெர்ஷனின் விலையானது ஸ்டாண்டர்ட் வெர்ஷனின் விலையே ஆகும், இது ரூ. 10.55 லட்சம் முதல் ரூ.13.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் ஃபெஸ்டிவ் எடிஷன் 1.0 லிட்டர், த்ரீ சிலிண்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 99bhp மற்றும் 148Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் அடங்கும், இது லிட்டருக்கு 21.5 கிமீ வரையிலான மைலேஜை வழங்குகிறது.
டொயோட்டாவின் விற்பனை சேவை மற்றும் பயன்படுத்திய கார் வர்த்தகத்தின் துணைத் தலைவர் சப்ரி மனோகர், 'எங்கள் முயற்சி எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் சிறப்பு சந்தர்ப்பங்கள் மற்றும் பண்டிகைகளில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த புதிய ஃபேஸ்டிவ் எடிஷன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் அற்புதமான அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என்று கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்