- இந்தியாவில் ரூ. 7.73 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது
- நாளை முதல் டெலிவரி தொடங்கும்
இந்த மாத தொடக்கத்தில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட அர்பன் க்ரூஸர் டைசர்ரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கிராஸ்ஓவர் ஐந்து வேரியன்ட்ஸில் ரூ. 7.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த மாடலின் டெலிவரி அடுத்த மாதம் அதாவது நாளை முதல் தொடங்க உள்ளது. தற்போது டீசர் நாடு முழுவதும் உள்ள டீலர்களை சென்றடையத் தொடங்கியுள்ளது.
டொயோட்டா டைசர் E, S, S+, G மற்றும் V ஆகிய ஐந்து வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. லூசன்ட் ஆரஞ்சு, ஸ்போர்ட்டின் ரெட், கஃபே ஒயிட், என்டைசிங் சில்வர் மற்றும் கேமிங் க்ரேமற்றும் டூயல்-டோன் விருப்பங்களில் ஸ்போர்ட்டின் ரெட், என்டைசிங் சில்வர் மற்றும் கஃபே ஒயிட் மிட்நைட் பிளாக்ஆகிய எட்டு வண்ண விருப்பங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
டொயோட்டா ஃப்ரோன்க்ஸை விட டொயோட்டா டைசர் ரூ. 25,000 விலை அதிகம். டைசரின் டாப்-ஸ்பெக் V வேரியன்ட்டில், 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ், 360-டிகிரி சரவுண்ட் கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.
பாதுகாப்பிற்காக, டைசரில் ஆறு ஏர்பேக்குகள், ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரியர் டிஃபாகர், சென்சார்கள் கொண்ட பார்க்கிங் கேமரா, ஐசோஃபிக்ஸ் மவுண்ட்கள் மற்றும் வேஹிகள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. இருப்பினும், டைசர் இன்னும் எந்த கிராஷ் டெஸ்ட்டும் செய்யப்படவில்லை.
இந்த கிராஸ்ஓவரில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 5-ஸ்பீட் மேனுவல், 5-ஸ்பீட் ஏஎம்டீ மற்றும் 6-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் கியர்பாக்ஸ் ஆகியவை அடங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்