- இது மாருதி-டொயோட்டா கூட்டணியின் நான்காவது தயாரிப்பு ஆகும்
- இது இரண்டு இன்ஜின் விருப்பங்களில் வழங்கப்படலாம்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், ஏப்ரல் 3, 2024 அன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் அடிப்படையிலான டைசரை நாட்டில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதும், டெசர் ஆனது பலேனோ-க்ளான்ஸா, கிராண்ட் விட்டாரா-ஹைரைடர் மற்றும் ஹைகிராஸ்-இன்விக்டோ ஆகியவற்றைத் தொடர்ந்து மாருதி-டொயோட்டா கூட்டணியின் கீழ் நான்காவது தயாரிப்பாக இது இருக்கும்.
டெசரின் டிசைன் மாருதியின் ஃப்ரோன்க்ஸ் போலவே இருக்கும். இருப்பினும், ஃப்ரோன்க்ஸிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள, டொயோட்டா ஒரு புதிய ஃப்ரண்ட் கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லேம்ப்கள் மற்றும் புதிய அலோய் வீல்ஸ்சை வழங்கும். இன்டீரியரில், டாஷ்போர்டு டிசைனும் கிட்டத்தட்ட ஃப்ரோன்க்ஸ் போலவே இருக்கும், ஆனால் இதை வேறுபடுத்த புதிய கேபின் தீம் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரியைப் பெறலாம்.
வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வென்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல், எச்யுடி மற்றும் 360 டிகிரி கேமராவுடன் கூடிய 9 இன்ச் ஸ்மார்ட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இதில் அடங்கும்.
இன்ஜின் விருப்பங்களைப் பற்றி பேசுகையில், மாருதி ஃப்ரோன்க்ஸிலிருந்த அதே இன்ஜின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைப் பெற வாய்ப்புள்ளது, இது முறையே 89bhp மற்றும் 113Nm டோர்க் மற்றும் 99bhp பவர் மற்றும் 148Nm டோர்க் ஆகியவற்றை உருவாக்கும். இந்த இன்ஜினை ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் அல்லது ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் கிடைக்கலாம்.
லான்ச்க்கு பிறகு, இது மாருதி ஃப்ரோன்க்ஸ், மஹிந்திரா XUV300, டாடா நெக்ஸான், ரெனோ கைகர், கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்