- செப்டம்பர் 2023 இல் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச மாதாந்திர விற்பனை ஆகும்
- ஒரு ஒரு ஆண்டுக்கு 53 சதவீத வளர்ச்சியை கண்டது
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் செப்டம்பர் 2023 இல் 23,590 யூனிட்ஸ் விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்த உற்பத்தியாளர் இதே செப்டம்பர் மாதம் 2022 இல் மொத்தம் 15,378 யூனிட்ஸை விற்று, ஒரு ஒரு அண்டுக்கும் 53 சதவீத வளர்ச்சியை கண்டது. இந்த மொத்த எண்ணிக்கையில் டொமெஸ்டிக் சேல் 22,168 யூனிட்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்க்கு 1,422 யூனிட்ஸ் அடங்கும்.
இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், டீகேஎம் நிறுவனம் 1,23,939 யூனிட்ஸை விற்றது, இதன் மூலம் 35 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. டொயோட்டா இந்த வளர்ச்சிக்கு அர்பன் க்ரூஸர் ஹைரைடர், இனோவா ஹைகிராஸ், ஹைலக்ஸ் மற்றும் ருமியன் போன்ற மாடல்ஸின் வெற்றியே காரணம்.
நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், டீகேஎம் நாடு முழுவதும் 577ல் இருந்து 612 டச் பாயிண்ட்ஸை விரிவுபடுத்தியது. கடந்த மாதம், ருமியன் எம்பீவியின் முன்பதிவுகளை நிறுவனம் நிறுத்தியது, ஏனெனில் இந்த வேரியண்ட்டிற்கான தேவை அதிகமாக இருந்தது.
விற்பனை குறித்து, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டரின் விற்பனை மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் அதுல் சூட் கூறுகையில், “டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டரின் விற்பனை எண்ணிக்கை 23,590 செப்டம்பர் 2023 இல் அடைந்துள்ளது, இது நிறுவனத்தின் பல்வேறு போர்ட்ஃபோலியோக்களை ஏற்றுக்கொள்வதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தயாரிப்புகள் மற்றும் வலுவான சேவை வழங்குதல்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் நகர்வுத் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய தேர்வை அனுமதிக்கின்றன. எங்கள் தயாரிப்பு வரிசை முழுவதும் நிலையான தேவையை நாங்கள் காண்கிறோம், இது நிறுவனத்தின் சாதனை செயல்திறனுக்கு வழிவகுக்கிறது. ஒரு முக்கிய தயாரிப்பு மைல்கல்லில், நாங்கள் புதிய ருமியன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யத் தொடங்கினோம்.” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: பவித்ரா மதியழகன்