- கடந்த மாதத்தில் விற்பனை 66 சதவீதம் அதிகரித்துள்ளது
- 2023 நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) அக்டோபர் மாதத்தில் மொத்தம் 21,879 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபர் 2022 இல் நிறுவனம் 13,143 யூனிட்ஸை விற்றுள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். மொத்த விற்பனையில், 20,542 யூனிட்ஸ் டொமெஸ்டிக் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 1,337 யூனிட்ஸ் இன்டர்நேஷனல் மார்க்கெட்க்கு எக்ஸ்போர்ட் செய்யப்பட்டுள்ளன.
டொயோட்டா 2023 நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 1,92,661 யூனிட்ஸை விற்றுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,38,190 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. இதன் காரணமாக விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
நீண்ட வெயிட்டிங் பீரியட்டை குறைக்க, டொயோட்டா தனது உற்பத்தியை மூன்று ஷிஃப்ட்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஃபார்ச்சூனர் எஸ்யுவியின் விலையை ரூ.70,000 வரை உயர்த்தியது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்