டொயோட்டா ருமியன் மற்றும் மாருதி எர்டிகா ஆகியவை அடிப்படையில் ஒரே கார் ஆகும், ருமியன் எர்டிகாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் ஆகும். இவை இரண்டும் ஒரே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் 7-சீட்டர் எம்பீவி ஆகும்.
விலை
இரண்டு கார்ஸின் இடையிலான முக்கிய வேறுபாடு விலை. மாருதி எர்டிகாவை விட டொயோட்டா ருமியன் விலை சற்று அதிகமாக உள்ளது. இரண்டு கார்ஸின் விலைகளை கீழே கொடுக்கபட்டுள்ளது:
டொயோட்டா ருமியன் | எக்ஸ்-ஷோரூம் விலை | எக்ஸ்-ஷோரூம் விலை | மாருதி எர்டிகா |
S எம்டீ | ரூ. 10.29 லட்சம் | ரூ. 8.64 லட்சம் | VXi (O) |
S எம்டீ (சிஎன்ஜி) | ரூ. 11.24 லட்சம் | ரூ. 9.78 லட்சம் | VXi (O) சிஎன்ஜி |
S ஏடீ | ரூ. 11.89 லட்சம் | ரூ. 10.73 லட்சம் | VXi ஏடீ |
G எம்டீ | ரூ. 11.45 லட்சம் | ரூ. 11.28 லட்சம் | ZXi (O) |
V எம்டீ | ரூ. 12.18 லட்சம் | ரூ. 10.88 லட்சம் | ZXi ப்ளஸ் |
V ஏடீ | ரூ. 13.68 லட்சம் | ரூ. 11.58 லட்சம் | ZXi ப்ளஸ் ஏடீ |
டொயோட்டா ருமியன் ரூ. 16,000 முதல் ரூ. 35,000 வரை மாருதி எர்டிகாவை விட அதிக விலையில் உள்ளது. இது டொயோட்டா பிராண்டின் ப்ரீமியம் காரணமாக இருக்கலாம்.
இறுதியில், டொயோட்டா ருமியன் அல்லது மாருதி எர்டிகா வாங்க வேண்டுமா என்பது உங்கள் பட்ஜெட் மற்றும் டொயோட்டா பிராண்டிற்கான உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நம்பகமான மற்றும் விசாலமான எம்பீவியை நீங்கள் தேடுகிறீர்களானால், இரண்டு கார்ஸுமே ஒரு நல்ல தேர்வு தான். இருப்பினும், நீங்கள் டொயோட்டா பிராண்டிற்கு ப்ரீமியம் செலுத்தத் தயாராக இருந்தால், ருமியன் சிறந்த தேர்வாகும்.
உங்கள் முடிவை எடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய வேறு சில விஷ்யங்கள்
ஃபீச்சர்ஸ்
எலக்ட்ரிக் சன்ரூஃப், 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற சில கூடுதல் அம்சங்களுடன் டொயோட்டா ருமியன்னை நீங்கள் பெறலாம்.
உத்தரவாதம்
டொயோட்டா ருமியன் மாருதி எர்டிகாவை விட நீண்ட காலத் உத்தரவாதத்துடன் பெறலாம். இது கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு காரணியாகும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்