- வரும் வாரங்களில் ருமியனின் விலை அறிவிக்கப்படும்
- மாருதி சுஸுகி XL6 மற்றும் கியா கேரன்ஸ்க்கு எதிராக டொயோட்டா ருமியன் போட்டியிடும்
டொயோட்டா இந்தியாவில் ருமியன் எம்பீவியை வெளியிட்டது. வரவிருக்கும் வாரங்களில் விலைகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கியா கேரன்ஸ் மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் XL6 ஆகிய மாடல்ஸ்க்கு எதிராக ருமியன் விற்பனைக்கு வரும். புதுப்பிக்கப்பட்ட கேரன்ஸுடன் ருமியனை விரைவாக ஒப்பிட்டுப் படிக்கவும்.
டொயோட்டா ருமியன் v/s கியா கேரன்ஸ்: டைமென்ஷன்ஸ் ஒப்பீடுகை
அளவீடுகள் (மி.மீ) | கியா கேரன்ஸ் | டொயோட்டா ருமியன் |
நீளம் | 4540 மி.மீ | 4445 மி.மீ |
அகலம் | 1800 மி.மீ | 1775 மி.மீ |
உயரம் | 1708 மி.மீ | 1755 மி.மீ |
வீல்பேஸ் | 2780 மி.மீ | 2740 மி.மீ |
வரிசைப் பட்டியலில் பார்த்தபடி, 4,540 மி.மீ ருமியனை விட கேரன்ஸ் 95 மி.மீ நீளமாக உள்ளது. மேலும், கேரன்ஸ் 2,780 மி.மீ வீல்பேஸைக் கொண்டுள்ளது, இது ருமியனை விட 40 மி.மீ அதிகம். இது தவிர, ருமியன் 1,800 மி.மீ அகலமாக உள்ளது.
டொயோட்டா ருமியன் v/s கியா கேரன்ஸ்: இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்
ருமியன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மோட்டார் 102bhp மற்றும் 136.8Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ருமியன் 87bhp பவரை வெளிப்படுத்தும் சிஎன்ஜி வேரியண்ட்டிலும் கிடைக்கிறது.
இதற்கிடையில், கேரன்ஸ் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்ஸுடன் இருக்கலாம். இவற்றில், 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் புதியது, இது 158bhp மற்றும் 253Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டு சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ருமியன் v/s கேரன்ஸ்: ஃபீச்சர்ஸ்
ருமியன் S, G மற்றும் V வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், இரண்டாவது வரிசைக்கான ஏர்கான் வென்ட்ஸ், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் நான்கு ஏர்பேக்ஸ் ஆகியவை ருமியனின் சிறப்பம்சமாகும்.
மறுபுறம், கேரன்ஸ் ப்ரீமியம், பிரஸ்டீஜ், பிரஸ்டீஜ் ப்ளஸ், லக்சுரி மற்றும் லக்சுரி ப்ளஸ் ட்ரிம்ஸில் வழங்கப்படுகிறது. டாப் வேரியண்ட்ஸில் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஏர் ப்யூரிஃபையர், எட்டு-ஸ்பீக்கர் போஸ் ஸ்டீரியோ சிஸ்டம், 64-வண்ண ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்