- பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜினில் வழங்கபடும்
- புக்கிங்ஸ் விரைவில் தொடங்கும்
டொயோட்டா இந்தியா, மாருதி எர்டிகா எம்பீவியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட எடிஷன் ருமியனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஐந்து வண்ண விருப்பங்களில் மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. லான்ச் தேதி மற்றும் முன்பதிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, இது வரும் வாரங்களில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா ருமியன் வேரியண்ட்ஸ் மற்றும் வண்ண விருபங்கள்
கஃபே ஒயிட், என்டைசிங் சில்வர், ரஸ்டிக் ப்ரௌன், ஐகானிக் க்ரே மற்றும் ஸ்பன்கி ப்ளூ உள்ளிட்ட ஐந்து வண்ண விருப்பங்களுடன் S, G மற்றும் V ஆகிய மூன்று ட்ரிம்ஸில் ருமியன் வழங்கப்படும்.
டொயோட்டா ருமியன் எக்ஸ்டீரியர்
பலேனோ-க்ளான்ஸாபோலவே, டொயோட்டா ருமியன், எர்டிகாவை அடிப்படையாகக் கொண்டது, மாருதியின் எம்பீவிலிருந்து வடிவமைப்பு மற்றும் இன்ஜின் ஆகியவற்றை வாங்கியது. இருப்பினும், மெஷ் பேட்டர்னுடன் கூடிய புதிய கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்ஸ் போன்ற சில வித்தியாசமான காரணிகள் உள்ளன.
டொயோட்டா ருமியன் வேரியண்ட்ஸ் மற்றும் ஃபீச்ர்ஸ்
இன்டீரியர் பற்றி பேசுகையில், இது டூயல்-டோன் பெய்ஜ், பிளாக் தீம், ஏழு இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏர்கான் வென்ட்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸுடன் வருகிறது.
ருமியன் நான்கு ஏர்பேக்ஸ், ஹில்-ஹோல்ட்-அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் ஃபோர்ஸ் லிமிட்டர்ஸ் மற்றும் ப்ரீ-டென்ஷனர்ஸ் கொண்ட ஃப்ரண்ட் சீட்பெல்ட்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.
ருமியன் வேரியண்ட்ஸின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
டொயோட்டா ருமியன்S | 5-ஸ்பீட் மேனுவல் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி |
டொயோட்டா ருமியன் G | 5-ஸ்பீட் மேனுவல் |
டொயோட்டா ருமியன் V | 5- ஸ்பீட் மேனுவல் 6- ஸ்பீட் ஆட்டோமேட்டிக் |
ருமியன் இன்ஜின் விவரங்கள்
ருமியன் மாருதி கே-சீரிஸின் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் சிஎன்ஜி வேரியண்ட்டுடன் இயக்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜின் 102bhp மற்றும் 136.8Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது, ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கண்வர்டர் ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சிஎன்ஜி மோடில் 87bhp மற்றும் 121.5Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது, இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. ருமியனின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்ஸின் மைலேஜ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வெர்ஷன் | மைலேஜ் |
ருமியன் 1.5 பெட்ரோல் மேனுவல் | லிட்டருக்கு 20.51கி.மீ |
ருமியன்1.5 பெட்ரோல் ஏடீ | லிட்டருக்கு 20.11கி.மீ |
ருமியன் சிஎன்ஜி | லிட்டருக்கு 26.11கி.மீ |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்