- இந்தியாவில் இதன் விலை ரூ. 10.29 லட்சத்தில் இருந்து ஆரம்பம்
- இது மூன்று வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது
டொயோட்டா இந்தியா மற்றொரு மாருதி சுஸுகி அடிப்படையிலான மாடல் ருமியன் எம்பீவியை அறிமுகப்படுத்தியது. இந்த எர்டிகா அடிப்படையிலான மாடல் ரூ.10.29 லட்சம் ஆரம்ப விலையில் மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இது அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த எம்பீவி நாட்டில் உள்ள அனைத்து டீலர்ஷிப்ஸிலும் சென்றடையத் தொடங்கியது.
ருமியன் எம்பீவி வேரியண்ட்ஸ் மற்றும் இன்ஜின் விருப்பங்கள்
டொயோட்டா ருமியன் S, G மற்றும் V ஆகிய மூன்று வேரியண்ட்ஸில் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிடுடன் இணைக்கப்பட்டுள்ளது. ருமியனின் பெட்ரோல் இன்ஜின் எர்டிகாவிடமிருந்து எடுக்கப்பட்டது, இது 102bhp மற்றும் 137Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. பிராண்ட் அதன் S வேரியண்ட்டுடன் சிஎன்ஜி விருப்பத்தையும் வழங்குகிறது.
ருமியனின் எக்ஸ்டீரியரில் ஏதும் வித்தியாசம் உள்ளதா?
எக்ஸ்டீரியரில், ருமியன் மாருதி சுஸுகி எர்டிகாவைப் போலவே தெரிகிறது. இருப்பினும், இதில் ஒரு புதிய பிளாக்-அவுட் கிரில், ஃப்ரண்ட் மற்றும் ரியரில் புதிய பம்பர்ஸ், புதிய அலோய் வீல்ஸ் மற்றும் டொயோட்டா பேட்ஜிங் ஆகியவற்றைப் பெறுகிறது.
இன்டீரியரில் அதிக மாற்றம் செய்யப்படவில்லை. பெய்ஜ் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் புதிய பிளாக் இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எம்பீவி ஆனது 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஸ்டீயரிங்கில் கண்ட்ரோல் பட்டன்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரூஃப்-மவுண்டட் ரியர் ஏசி வென்ட்ஸ், ரியர் வைப்பர், ரியர் டிஃபோகர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றுடன் வருகிறது.
டொயோட்டா ருமியனின் வண்ண விருப்பங்கள்
கஃபே ஒயிட், என்டைசிங் சில்வர், ரஸ்டிக் ப்ரௌன், ஐகானிக் க்ரே மற்றும் ஸ்பன்கி ப்ளூ ஆகிய ஐந்து வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
ருமியனின் வெயிட்டிங் பீரியட்
நீங்கள் ருமியன் எம்பீவியை வாங்க நினைத்தால், இது டெலிவரிக்கு ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்