- மூன்று வேரியண்ட்ஸ், ஐந்து வண்ண விருபங்களில் வழங்கப்படும்
- இதை சிஎன்ஜி வேரியண்ட்டிலும் பெறலாம்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டீகேஎம்) சமீபத்தில், ருமியன் எம்பீவியை ரூ. 10.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நாட்டில் அறிமுகப்படுதியது. மாருதி எர்டிகா வெர்ஷனின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட இந்த மாடல், மூன்று வேரியண்ட்ஸ் மற்றும் ஐந்து வண்ண விருபங்களில் வழங்கப்படும். மேலும், ரூ. 11,000 மட்டுமே செலுத்தி இந்த புதிய ருமியன்னை புக் செய்யலாம்.
முக்கிய நகரங்களில் டொயோட்டா ருமியனின் ஆன்-ரோடு விலை
நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கான டொயோட்டா ருமியனின் ஆன் ரோடு விலையை கீழே பட்டியலிட்டுள்ளோம்:
நகரங்கள் | பேஸ் வேரியண்ட் | டாப் வேரியண்ட் |
மும்பை | ரூ. 12.27 லட்சம் | ரூ. 16.24 லட்சம் |
சென்னை | ரூ. 12.57 லட்சம் | ரூ. 16.63 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 12.56 லட்சம் | ரூ. 16.61 லட்சம் |
மதுரை | ரூ. 12.56 லட்சம் | ரூ. 16.61 லட்சம் |
பெங்களூரு | ரூ. 12.77 லட்சம் | ரூ. 16.90 லட்சம் |
திருப்பூர் | ரூ. 12.56 லட்சம் | ரூ. 16.61 லட்சம் |
ஹைதராபாத் | ரூ. 12.76 லட்சம் | ரூ. 16.89 லட்சம் |
கொச்சி | ரூ. 12.54 லட்சம் | ரூ. 16.60 லட்சம் |
திருச்சிராப்பள்ளி | ரூ. 12.56 லட்சம் | ரூ. 16.61 லட்சம் |
டெல்லி | ரூ. 12.08 லட்சம் | ரூ. 15.97 லட்சம் |
குறிப்பிடத்தக்க வகையில், ருமியனின் பேஸ் வேரியண்ட் டெல்லியில் குறைந்த விலையில் கிடைக்கிறது, மேலும் பெங்களூரில் விலை ரூ. 69,000 வரை அதிக வித்யாசத்தில் உள்ளது. இதில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருப்பூர், வேவேறு தாலுகாவாக இருந்தாலும், ஒரே மாதிரியான விலைகளில் உள்ளன. விரிவான விவரங்களுக்கு அருகில் உள்ள டொயோட்டா அங்கீகரிக்கப்பட்ட டீலரைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்குறோம்.
ருமியனின் இன்ஜின் மற்றும் மைலேஜ்
2023 டொயோட்டா ருமியன் 1.5-லிட்டர், ஃபோர் சிலிண்டர், என்ஏ பெட்ரோல் இன்ஜின் 102bhp மற்றும் 137Nm டோர்க்கை கொண்டுள்ளது. இந்த மோட்டார் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் யூனிட்டு இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், சிஎன்ஜி யில் 87bhp மற்றும் 121Nm டோர்க்கை உருவாக்குகிறது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய டொயோட்டா ருமியன், ஏஆர்ஏஐ-சான்றளிக்கப்பட்ட மைலேஜ் சிஎன்ஜியில் கிலோவுக்கு 26.11 கி.மீ வரை வழங்குகிறது. இதற்கிடையில், பெட்ரோல் ஏடீ வெர்ஷன் லிட்டருக்கு 20.51 கி.மீ மைலேஜ் மற்றும் பெட்ரோல் எம்டீ லிட்டருக்கு 20.11 கி.மீ மைலேஜை வழங்குகிறது.