- ருமியனின் மேனுவல் வேரியன்ட்டின் விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளது
- க்ளான்ஸாவின் விலை ரூ. 6.86 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) இந்த மாதம் ருமியன் மற்றும் க்ளான்ஸாவின் விலையில் மாற்றம் செய்துள்ளது. மாருதி எர்டிகா அடிப்படையிலான ருமியன் எம்பீவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 10.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லான்ச் செய்யப்பட்டது. பலேனோ அடிப்படையிலான க்ளான்ஸா தற்போது ரூ. 6.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது அவற்றின் அதிகரித்த விலையை பார்ப்போம், அதற்காக நீங்கள் இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்க வேண்டும்.
டொயோட்டா ருமியன் எவ்வளவு விலை உயர்ந்தது?
டொயோட்டா இந்த த்ரீ ரோ எம்பீவியை S, G மற்றும் V ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் ஐந்து வண்ண விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில் ரூ. 5,000 அதிகரித்துள்ள நிலையில், மேனுவல் வேரியன்ட் விலை இப்போது ரூ. 15,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பிறகு, ருமியனின் விலை இப்போது ரூ. 10.44 லட்சத்தில் இருந்து ரூ. 11.39 லட்சமாக உள்ளது (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்).
டொயோட்டா ருமியனின் புதிய வேரியன்ட் வாரியான விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வேரியன்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
S எம்டீ | ரூ. 10,44,000 |
G எம்டீ | ரூ. 11,60,000 |
S ஏடீ | ரூ. 11,94,000 |
V எம்டீ | ரூ. 12,33,000 |
V ஏடீ | ரூ. 13,73,000 |
S சிஎன்ஜி | ரூ. 11,39,000 |
க்ளான்ஸாவின் புதிய விலை
டொயோட்டா க்ளான்ஸா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் விருப்பங்களுடன் E, S, G மற்றும் V ஆகிய நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. சிஎன்ஜி உட்பட அனைத்து மேனுவல் வேரியன்ட்கும் ஒரே மாதிரியான விலை ரூ. 5,000 உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் ஆட்டோமேட்டிக் வெர்ஷனின் (S, G மற்றும் V) விலையில் எந்த மாற்றமும் இல்லை.
டொயோட்டா க்ளான்ஸாவின் வேரியன்ட் வாரியான புதிய விலைகள்:
வேரியன்ட் | எக்ஸ்-ஷோரூம் விலை |
E | ரூ. 6.86 லட்சம் |
S | ரூ. 7.75 லட்சம் |
S ஏஎம்டீ | ரூ. 8.25 லட்சம் |
G | ரூ. 8.78 லட்சம் |
G ஏஎம்டீ | ரூ. 9.28 லட்சம் |
V | ரூ. 9.78 லட்சம் |
V ஏஎம்டீ | ரூ. 9.99 லட்சம் |
S சிஎன்ஜி | ரூ. 8.65 லட்சம் |
G சிஎன்ஜி | ரூ. 9.68 லட்சம் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்