- ருமியன் ஐந்து வண்ணம் மற்றும் மூன்று வேரியண்ட்ஸில் தேர்வு செய்யலாம்
- சிஎன்ஜி வேரியண்ட்டிலும் பெறலாம்
ருமியன் வேரியண்ட்ஸ் மற்றும் வண்ண விருபங்கள்
சமீபதிதில் டொயோட்டா பெங்களூரில் ருமியன் எம்பீவி’யின் விலையை ரூ. 10.29 (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் லான்ச் செய்தது. இதை வாடிக்கையாளர் ஐந்து வண்ணம் மற்றும் மூன்று வேரியண்ட்ஸில் தேர்வு செய்யலாம். வாடிக்கையாளர் இதை ரூ. 11.000 செலுத்தி புக் செய்யலாம்.
ருமியன் எக்ஸ்டீரியர் டிசைன்
எக்ஸ்டீரியர் டிசைனைப் பொறுத்தவரை, இதில் இனோவா க்ரிஸ்டா போன்ற புதிய கிரில், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், டூயல்-டோன் அலோய் வீல்ஸ் மற்றும் வெர்டிகல் எல்இடி டெயில்லைட்ஸை பெறுகிறது.
ருமியன் இன்டீரியர் மற்றும் ஃபிச்சர்ஸ்
இதன் உட்புறங்களில் ஆறு ஏர்பேக்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், டொயோட்டா ஐ-கனெக்ட் டெக்னாலஜி, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன.
டொயோட்டா ருமியன் இன்ஜின்
ருமியன் 1.5 லிட்டர், என்ஏ பெட்ரோல் மோட்டார் மூலம் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிக்ஸ் ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மோடில் இது 102bhp மற்றும் 137Nm டோர்க்கை உருவாக்குகிறது, அதே நேரத்தில் சிஎன்ஜி வேரியண்ட்டில் 87bhp மற்றும் 121Nm டோர்க்கை உருவாக்குகிறது.
ருமியன் விலை
ருமியனின் வேரியண்ட் வாரியான விலைகள் (எக்ஸ்-ஷோரூம்) கீழே கொடுக்கக்பட்டுள்ளன:
வேரியண்ட்ஸ் | விலை |
S எம்டீ (பெட்ரோல்) | ரூ. 10.29 லட்சம் |
S ஏடீ (பெட்ரோல்) | ரூ. 11.89 லட்சம் |
G எம்டீ (பெட்ரோல்) | ரூ. 11.45 லட்சம் |
V எம்டீ (பெட்ரோல்) | ரூ. 12.18 லட்சம் |
V ஏடீ (பெட்ரோல்) | ரூ. 13.68 லட்சம் |
S எம்டீ (சிஎன்ஜி) | ரூ. 11.24 லட்சம் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்