- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 10.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- 8 செப்டம்பர், 2023 அன்று டெலிவரி தொடங்கப்படும்
டொயோட்டா இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ருமியன் எம்பீவியை இந்தியாவில் ரூ. 10.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மாருதி எர்டிகா-ரீபேட்ஜ் செய்யப்பட்ட எம்பீவிபெட்ரோல் மற்றும் சிஎன்ஜிஇன்ஜின் விருப்பங்களுடன் மூன்று வேரியண்ட்ஸில் பெறலாம். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ருமியன்னை ரூ. 11,000 டோக்கன் தொகை மற்றும்செப்டம்பர் 8, 2023 முதல் டெலிவரிஸ் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா ருமியனின் வேரியண்ட்ஸ் மற்றும் இன்ஜின் விருப்பங்கள்
இந்த எம்பீவிஆனது S, G மற்றும் V ஆகிய மூன்று வேரியண்ட்ஸில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், S மேனுவல் வேரியண்ட்டிற்கு மட்டுமே சிஎன்ஜிஇன்ஜின் உள்ளது. இதன் 1.5-லிட்டர் என்ஏபெட்ரோல் இன்ஜின் 102bhp மற்றும் 137Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், சிஎன்ஜிவெர்ஷன் 87bhp மற்றும் 121Nm பீக் டோர்க்கை உருவாக்குகிறது.
புதிய ருமியன் எம்பீவியின் நிறங்கள் மற்றும் ஆக்சஸரீஸ் லிஸ்ட்
கஃபே ஒயிட், ஸ்பன்கி ப்ளூ, ஐகானிக் க்ரே, என்டைசிங் சில்வர் மற்றும் ரஸ்டிக் ப்ரௌன் ஆகிய ஐந்து வண்ண விருப்பங்களில் ருமியன் கிடைக்கிறது. புதிய டொயோட்டா ருமியனுடன் வழங்கப்படும் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் ஆக்சஸரீஸ் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
எக்ஸ்டீரியர் ஆக்சஸரீஸ்: |
ஹெட்லேம்ப் குரோம் கார்னிஷ் |
பாடி சைட் மௌல்டிங் குரோம் கார்னிஷ் |
டெயில்கேட் குரோம் கார்னிஷ் |
ரூஃப் எட்ஜ் ஸ்பாய்லர் |
குரோம் டோர் ஹேண்டல்ஸ் |
நம்பர் பிளேட் குரோம் கார்னிஷ் |
ரியர் அண்டர்பாடி ஸ்பாய்லர் |
டோர் வைஸர்ஸில் குரோம் |
ரியர் பம்பர் குரோம் கார்னிஷ் |
பம்பர் கார்னர் ப்ரொடெக்டர் |
சைட் அண்டர்பாடி ஸ்பாய்லர் |
மட்கார்ட் |
கார் கவர் |
இன்டீரியர் ஆக்சஸரீஸ்: |
ஃப்ளோர் மேட்– (6 வகைகள்) |
லக்கேஜ் ட்ரே |
சீட் கவர்ஸ் (3 வகைகள்) |
டாஷ்போர்டு வுடன் ஃபினிஷ் கிட் |
விண்டோ சன்ஷேட் |
ஆர்ம்ரெஸ்ட் வுடன் ஃபினிஷ் கிட் |
டோர் சில் கார்ட் (2 வகைகள்) |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்